பக்கம்:சுருளிமலை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மு. கருணாநிதி நீ சிங்காநல்லூருக்குப் போயிருக்கிறாய் என்றுதான் ஊரிலே பிரஸ்தாபம் ! கல்யாணம் பண்ணின நேரம் நல்ல நேரம் இல்லை. அதனால் சொந்த ஊருக்குப் போய்விட்டு ரெண்டுமாசம் கழித்து வருவாய் என்றுதான் கேட்டவருக் கெல்லாம் சொல்லி வைத்திருக்கிறேன் !” 06 'நான் சொல்றதைக் கேளுங்க புருஷனோடு வாழ திருப்தியில்லைன்னு மனைவி சொல்லும்போது. மேலும் மேலும் பிடிவாதம் பண்றதிலே என்னங்க லாபம்?' திருப்தியோடு வாழ வேண்டாம். அதிருப்தியோடு வாழ ! எப்படியோ நீ என் வீட்டிலே இருந்தா போதும்!' " பொம்மை மாதிரி உங்கவீட்ல் இருக்கணுமா?" 'ராணி மாதிரி இரு !" .. பிராணி மாதிரிதான் இருக்கலாம்! பிராணிக்குக்கூட என்னைப் போல கஷ்டகாலம் வராது! உன்னை எங்க வீட்டு எஜமானி மாதிரி நடத்துறோம். என்னை உன் அடிமை மாதிரியே நடத்து ! இதைவிட நான் இன்னும் என்ன சொல்றது மைனா ?" .. வீட்ல வந்து எல்லாவற்றையும் ஆட்டிப் படைச்சு அர சாட்சி பண்ணனும்னா நினைக்கிறேன்? பிச்சைக்காரியா திரி வேன் - உங்க வீட்டு வேலைக்காரியாக் கூட இருப்பேன்-ஆனா மனசுக்குத் திருப்தியில்லாம எதுக்காக எனக்கு எஜமானி உத்தியோகம் ?” 66 - உன் மனசுக்குத் திருப்தியாத்தானே இருக்கணும். இதோ இப்பவே சத்தியம் செய்து கொடுக்கிறேன், என் குலதெய்வத்தின்மேல் ஆணை ! என் தொழில்மீது ஆணை ! உன்னை நான் தொடுவதே இலலை. என் மகளைப் போலவே நடத்துகிறேன் போதுமா? மகளைப் போல நடத்துவது உண்மையானால், இப்போதே என்னை மகளைப் போல நடத்துங்கள். மகளுக்குக் கல்யாணமாகி மாபபிள்ளை வீட்டுக்கு வந்திருக்கிறாள். அப்பா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/48&oldid=1694932" இலிருந்து மீள்விக்கப்பட்டது