பக்கம்:சுருளிமலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 47° நீங்கள் மகளைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கற்பனை செய்துகிட்டு, நீங்க மாத்திரம் ஊருக்குப் போங்க!' மைனா! நீ என் மகள் தான் - - -என்னை மன்னித்துவிடு !" மைனா, சற்றும் எதிர்பாராத நிலையில் பீதாம்பரம் அவள் காலில் விழுந்துவிட்டார்; அவளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை மீண்டும் அசைவற்றுப் போனாள். பீ தாம்பரம் தன் காலில் விழுந்து கெஞ்சுவதாகவே கெஞ்சுவதாகவே அவளுக்குத் தோன்ற வில்லை தன் கணவன் பயங்கர விசுவரூபம் எடுத்து. காய்ச்சிய இரும்பாலான கரத்தால் தன்னை அலக்காகத் தூக்கி நரநர வென்று பிழிவது போலவும், தன் விலா எலும்புகள் நொறுங்கி, இருதயம் நசுங்கி, ரத்தம் பீறிட்டெழுவது போலவும் அவ ளுக்குத் தோன்றியது. அவன் அவளை அடித்திருக்கலாம். வெட்டியிருக்கலாம். மண்டையை உடைத்திருக்கலாம் அதை யெல்லாங்கூட அவளால் தாங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். காலடியில் அவன் சுருண்டு கிடப்பதை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை கண்ணீர் அவளையறியாது பெரு கிற்று. மெல்லிய குரலில் “ எழுந்திருங்கள்!" அன்று அவரது தோள்பட்டையைப் பிடித்துத் தூக்கினாள். 6 6 உண்மைதான் மைனா ! உன்னை என் மகளாகவே நடத்து வேன். நம்முடைய கல்யாணத்தை மறக்கச் சொன்னாயே; நிச்சயம் மறந்துவிடுகிறேன். நீயும் மறந்துவிடு. மகளும் தந்தையுமாக வாழ்வோம் இன்னும் சொல்கிறேன்; மகளே உனக்கேற்ற ஒரு வாலிபனையும் திருமணம் செய்து வைக் கிறேன் !” அழுதபடி பீதாம்பரம் இதைச் சொல்லி முடிப்பதற்குள் மைனா அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அய்யோ ! என்னை மன்னித்து விடுங்கள்: இப்படியெல்லாம் சொல்லாதீர்கள் !" என்று கதறித் துடித்தாள். பீதாம்பரத்தின் முகத்தைப் பார்க்கவே இப்போது அவள் அஞ்சி நடுங்கினாள். தன்னை உயிரோடுவைத்து அணு அணுவாகச் சித்திரவதை. செய்யும் பேய் என்று யாரைக் கருதினாளோ ; அந்தப்பேய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/49&oldid=1694933" இலிருந்து மீள்விக்கப்பட்டது