பக்கம்:சுருளிமலை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மு. கருணாநிதி அவள் எதிரே நின்று கெஞ்சும் தோரணையில் அவள் உயிரை யாசிப்பதுபோல் ஒரு சமயம் தோன்றியது அடுத்தகணம் ; அன்பின் அரவணைப்பில் அந்தப் பேயை அறியாமலே அதன் கொடிய கூரிய நகங்கள் அவள் நெஞ்சைக் கிழித்து இருதயத் தைப் பொத்தலாக்கி விட்டதுபோலவும் இருந்தது. முதல் நாள் இரவு அவள் உள்ளம், உடல் எல்லாம் பாழ்பட்டு விட்டதை எண்ணிக் கொண்டாள். வியர்வை கொட்டியது. மீளாத பாபக் குழியில் விழுந்து விட்டோம் என்ற ஒரு பய உணர்ச்சி மேலும் அவளை ஆட்டிப்படைத்தது. பித்தம் கொண்டவள் போல் ஆனாள். 6 என்னைத் தொடாதீர்கள்-நான் பாபி-நான் பாபி !" என்று கத்தினாள். " மைனா ! மைனா !" பிதாம்பரம் அழைத்தார். பருவம், மைனா, மைனா வெறி கொண்டவள்போல ஓடத் தொடங்கினாள். பீ தாம்பரம் பின் தொடர்ந்தார். ஆனால் அவரது அவள் ஓட்டத்தைத் தடுக்க உதவி செய்யவில்லை. நேராகக் கோயில் நிர்வாகி வீட்டுக்குள் ஓடினாள். அங்கே நிர்வாகி மட்டுமே இருந்தார். "தீச்சட்டி சிங்காரம் இருக் கிறாரா ?" என்று பரபரப்போடு கேட்டாள். நிர்வாகி, ஒரு விநாடி தாமதித்தார், பதில் சொல்ல ! பிறகு அவர், "சிங்காரம் தானே ? உள்ளேயிருக்கிறார்!' என்று கூறினார். மைனா வீட்டுக்குள்ளே ஓடினாள். வீட்டுக்குள் யாருமே காணப்பட வில்லை ஒரே அமைதியாக இருந்தது. திருப்பி வாயிற்புறம் ஓடிவந்தாள். வாயிற்கதவு தாள் போடப்பட்டிருந்தது. எப்படி வெளியே போவது? விழித்தாள்! கடகடவென சிரித்துக் கொண்டே, கோயில் நிர்வாகி அவளை நெருங்கினார். மைனா, பெருத்த கூச்சல் போட்டாள். அந்தக் கூச்சல் யார் காதிலும் விழவில்லை. நிர்வாகியின் கைகளில் மைனா சிக்கினாள். எத்தனையோ நாளாக நிர்வாகியின் நெஞ்சில் மூண்டுகொண்டிருந்த நெருப்பு அப்போது தான் 1 அணைந்தது. மூன்றாவது முறையாக அவள் கற்பு களங்கப் படுத்தப்பட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/50&oldid=1694934" இலிருந்து மீள்விக்கப்பட்டது