பக்கம்:சுருளிமலை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 66 மு. கருணாநிதி சுருளிமலை' யென்றதும் யாரோ பெரிய கொள்ளைக் காரன்-பக்காத் திருடன் என்றெல்லாம் எண்ணத் தோன்றும். பக்தர்கட்கோ, சுருளிமலை மீதில் மேவும் சீலா! உன்னைத் தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா ! " எனப்பாடத் தோன்றும் சுருளிமலைச்சாரல் இன்றைக்கும் திருடர்களும் குற்றவாளிகளும் மறைந்து வாழ்வதற்கான வசதியை அளித் துககொண்டிருக்கிறதென மதுரை மாவட்டத்தார் கூறுகிறார்கள். நமது சுருளிமலையோ திருடர்களையும் குற்றவாளிகளையும் சந் தியில் நிறுத்துகின்ற முயற்சிக்குத் தன்னையே அர்ப்பணிக் கின்றான். சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். தாய், தந்தை, ஒரு சகோதரி அவர்களே அவனுக்கிருக்கிற ஆதரவு. கோயில் காளை சிவாவைத் தவிர அவனுக்கு அந்த ஊரில் யாருமே நண்பர்கள் கிடையாது. சிவாவுக்கு அடுத்தபடியாக அவன் பிரியம் வைத்திருப்பது மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங் குழல்மீது தான் ! சிவாவும், குழலும் இருந்துவிட்டால் அவ னுக்குப் பசியேகூடத்தெரிவதில்லை. பதினான்கு வயது கூடச் சரியாக நிரம்பாத அவன்பால் குடும்ப பாரம் முழுவதையும் போடுவதற்கு விரும்பாவிட்டாலும், அவனிடமிருந்து சிறு உதவி களையாவது எதிர்பார்த்தது அந்த ஏழைக் குடும்பம். அவனோ கோயில் காளை போலக் கவலையற்றுத் திரிந்தான். தந்தை திட்டுவார் - அடிக்க ஓடுவார்-அக்காள் அதைத் தடுத்து அழு வாள் - தாயோ வேதனைக்களமானாள். சோகப்புயலானாள். ஆனால் பெயர் என்னவோ பூஞ்சோலைதான்!... மண் மிதித்து, பானை சட்டிசெய்து. வயிறு வளர்க்கும் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, உழைப்பொன்றே உலக இன்ப மெனக்கொண்டு, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நகர்த்தி விட்ட பெருமாட்டி-அன்பின் திரு உருவம்-குணக் குன்று- குடும்பத்தின் நிலை விளக்காய் ஒளிவிட்டுப் பெருமை கொண்ட பெண்ணரசு! பொன்னையா வீடென்றால் புரியாது யாருக்கும்- அவன் மனைவி பூஞ்சோலை பெயராலேதான் வீட்டுக்குப் பெய ருண்டு அவ்வூரில் ! யார் வீட்டில் உடல் நலிவு என்றாலும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/8&oldid=1694869" இலிருந்து மீள்விக்கப்பட்டது