பக்கம்:சுருளிமலை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F 78 மு கருணாநிதி 'நல்லா இருக்கு போ! ஆம்பளையில்லாம பொம்பளை வாழ்ந்துட முடியுமா? ஏதோ நல்லதோ கெட்டதோ ; ஆம்ப ளைக்கு ஒரு பொம்பளை; பொம்பளைக்கு ஒரு ஆம்பளைன்னு அன்னைக்கே ஆண்டவன் தலையிலே எழுதித்தானே அனுப் புறான் !”- இப்படி வேதாந்த விசாரணையில் இறங்கினாள் கற்பூரம். பொன்மணி, அதற்குப் பதில் கூறாமல், மஞ்சள் சூடாகிறதா என்பதை கவனித்துக் கொண்டிருந்தாள். "என்ன பொன்மணி; நான் பேசுறது உனக்குப் பிடிக்க லியா? ஒரேயடியா மௌனம் சாதிக்கிறியே! கல்யாண விஷயம், ஒரு பாட்டியும் ஒரு வயசுப்பெண்ணும் பேசும்போதுதான் வயசுப் பெண்ணுக்குப் பிடிக்காதது மாதிரி பேச்சு அமையும். நம்ப ரெண்டு பேருமே வயசுப்பெண்கள்; மனம் விட்டுப் பேசலாமே..." என்றாள் கற்பூரம். மனம் விட்டுப் பேசறது அப்பறம் இருக்கட்டும்; முதல்ல மஞ்சப்பத்தைத் தயார் பண்ணலாம்!" பொன்மணி அலட்சிய மாக விடையளித்துக் காரியத்தை கவனித்தாள். - "ம்... புரியுது ; புரியுது! புரியுதும்மா புரியுது ! கண்ணாலயும் வாயாலயும் பதில் சொல்லமாட்டேன்; காரியத்திலே காட்டுறேன் பார் ; என் மனசை! அப்படிங்கிறாப்லே இருக்கு உன் செய்கை!" என்று கூறி கேலியாகச் சிரித்த கற்பூரத்தின் உள்ளத்தை சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல், "இப்ப என்ன சொல்றே ? கொஞ்சம் புரியும்படியா சொல்லு!" என்று முகத்தைக் கோணிக் கொண்டாள் பொன்மணி. சொல்லுவானேன்? போகப் போகத் தெரியுது" என்றாள் கற்பூரம் "கிடக்கட்டும்! யார் அவள் தூக்கு மாட்டிக்கொண்டவள் ? அவள் என்னமோ உங்க அண்ணன் மேலே பழியைப் போட் டிருக்காளே; என்ன சமாச்சாரம்? விபரமாச் சொல்லேன்!', என்று பொன்மணி கேட்டதும், கற்பூரம், "உம்...! அப்படிக் கேளு! என் ராஜாத்தி; அப்படிக்கேளு! நீ கேட்பாய்ன்னு எனக்கு முன்னமே தெரியும். எப்படிடா கேக்கிறதுன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/80&oldid=1694967" இலிருந்து மீள்விக்கப்பட்டது