பக்கம்:சுலபா.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 drājūīy

பதில் சொல்லு...இல்லாட்டி எனக்கு ராத்திரி எல்லாம் தூக்கம் வராது..."

கோகிலா சிரித்தாள். கேட்டாள்! 'உன்னை நினைச்சு எத்தனையோ ஆம்பிளைங்க ராத்திரி எல்லாம் தூக்கமில்லாமத் தவிக்கிருங்க! உனக்கு இன்னும் முகம் தெரியாத ஆம்பிளேயை நினைச்சு நீயும்தான் தூக்க மில்லாமல் ஒருநாள் தவியேன்! அதிலே என்ன தப்பு.'

"என் நிலையில் நீ இருந்தால்தான் என் தவிப்பு உனக்குப் புரியும்டி கோகிலா.’’ - இன்னும் சில வாரங்கள் தான் இடிையிலிருக்கின்றன. உன் தாபமோ, தாகமோ, தவிப்போ-நீ எப்படி விரும்பு கிருயோ அதை எல்லாம்-ஒன்று சேர்த்து வைத்துக்கொள்! உன் இருபத்தெட்டாவது பிறந்த தினத்தன்று நீ விரும்பிய சுகத்தை உனக்குக் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு'

"பொறுப்பு இருக்கட்டும்! அதில்தான் பல சிக்கல்கள் இருக்கின்றன. இங்கே நாசம்மா கவிதா யாருக்கும் இது பற்றித் தெரியக்கூடாது. இரகசியமாக இது நடக்கணும்.

'இதெல்லாம் படிச்சுப் படிச்சு நீ சொல்லணுமாடீ சுலபா? நான் பார்த்துக்கிறேன். எங்கிட்டி விட்டுடு. எனக்கு உன் தோது தெரியும்'- х -

தன் சிநேகிதியிடம் இந்த அந்தரங்கத்தைத் தான் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டு சொல்லியிருக்கக்கூடிாதோ என்று சுலப இப்போது இரண்டாவது எண்ணமாக யோசித்துத் தயங்கிளுள்; இவள் ஒன்று கிடக்க ஒன்று செய்து அவமானமாகவோ, தலைக் குனிவாகவோ முடிந்துவிடக் கூடாதே என்று பயமாகவும் இருந்தது, அதே சமயம் கோகிலாவின் திறமையை ஒரேயடியாகக் குறைத்து மதிப்பிடி வும் மனசு இடம் கொடுக்க வில்லை. வர்த்தகர்கள், சந்நியாசி கள், அரசியல்வாதிகள், எல்லாத் தரப்பிலும் கோகிலாவுக்கு நல்ல பரிச்சயம் உண்டு என்பதைச் சுலபா அறிவாள். :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/100&oldid=565768" இலிருந்து மீள்விக்கப்பட்டது