பக்கம்:சுலபா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 101

'சுலபா என்ருல் சுகமான நறுமணம். சுலபா என்ருல் சுத்தம். சுலபா என்ருல் நறுவிசான துல்லியமான பழக்கி வழக்கங்கள். சுலபா என்ருல் கவர்ச்சி' என்று பேரெடுத்திருந் தாள் அவள் இதை எல்லாம் கூர்ந்து கவனித்திருந்த தயாரிப்பாளர்கள் அவளுக்கு ரொக்கம் கொண்டு வந்தால் கூட உயர்ரக செண்ட் தெளித்துப் புத்தம் புதிய நோட்டுக் கட்டுக்களாகக் கொண்டு வந்து கெடுேக்கப் பழகியிருந்தனர்.

ஸ்ெட்டில் காபி, குளிர்பானம், பாதாம்கீர் கொண்டு வருகிற போது-கொண்டு வருகிற பையன், அவன் உடிை, கொண்டுவருகிற கிளாஸ் எல்லாமே சுத்தமாயிருக்க வேண்டும். இவளைத் திருப்திப்படுத்த என்றே எஸ். பி. எஸ் பாலக்காட்டி லிருந்து நல்ல நிற முள்ள சுத்தமான பழக்க வழக்கமுள்ள ஒரு நாயர்ப்பையனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். "அவங் களுக்குப் பசங்க நீட்டா ஜம்முனு இருக்கணும்ப்பா இல்லாட்டி கிளாஸை அப்படியே மூஞ்சியிலே கிடாசிடுவாங்க"-என்று புரொடக்ஷன் மேனேஜரிடம் அடிக்கடி எஸ். பி. எஸ். சுலபாவுக்காக அக்கறை எடுத்துக் கொண்டு பேசுவார். ஒரு தேவதையை வழிபடுவது போல் தயாரிப்பாளர்கள் அவளை வழிபட்டனர். அவளைப் பிரார்த்தித்தனர். வரம் வேண்டினர், மகிருடினர். நைவேத்தியம் செய்தனர்.

அரைத்தச் சந்தன நிறம்தான் அவளுக்கு மிகவும் பிடித்த நிறம். வெளிர் நிறங்களில் தங்கமும் பாதாம் கீரின் வண்ண மும் அவளுக்கு மிக மிகப் பிடித்தமானவை. முதல் முதலாக அவளை ஏமாற்றிவிட்டு ஓடிய குப்பைய ரெட்டிகூட அந்த நிறம்தான். பாதாம்கீரைக் கையில் பிடித்தபடியே சுலபா அதன் நிறத்தில் என்னென்னவோ ஞாபகங்கள் வந்து அப்படியே இலயித்துப்போய் உட்கார்ந்து விடுவாள் சில சமயங்களில். பருகி முடித்துவிட்டால் அந்த நிறத்தைப் பார்த்து இரசிக்க முடியாதே என்று அப்படியே இலயித்துப் போய்ப் பிரமை பிடித்தவள்போல அதை நோக்கியபடி அவள் உட்கார்ந்துவிடுகிற மர்மத்தை நரசம்மாவினுல்கூடக் கண்டு

अ*~~T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/103&oldid=565771" இலிருந்து மீள்விக்கப்பட்டது