பக்கம்:சுலபா.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 &6\}Lily

பிடிக்க முடியவில்லை. 'அம்மாவுக்குப் பாதாம்கீர்னு ரொம்பப் பிடிக்கும் -என்று மட்டும் வேலையாட்கள் ஸ்டுடியோ பணி யாட்கள் அதைப் புரிந்துகொண்டிருந்தனர். கலப்படமில்லாத ஸ்வர்ணத் தாம்பாளத்தில் அங்கங்கே அடர்த்தியாக அரைக் கீரை விதையைத் தூவிற்ைபோல் மயிரடர்ந்த இளம் துறவி களின் பரந்த மார்பும். புஜங்களும் அவள் உள்ளத்தைக் கிறங் கச் செய்பவை. ஒருநாள் நல்ல போதையில் தன் அந்தரங்கத் தில் சிறிதும் மறைக்காமல் 'அப்படித் தங்கத் தாம்பாளம் போன்ற மார்பையும் முற்றிய மூங்கிங் போல ஒளிமின்னும் புஜங்களையும் பிளேட்டில் இருக்கிற பாதாம் அல்வாவைச் சாப்பிடுவது போல் சாப்பிட வேண்டும்டி கோகிலா என்று சுலபா வர்ணித்த அடங்காத வெறியைக் கேட்டுக் கோகிலா அவளைக் கிண்டல்கூடச் செய்திருக்கிருள்,

"வர வர நீ கன்னி பால்ஸ்-மாதிரிப் பேச ஆரம்பிச்சிம் டேடீ சுலபா!'

"கன்னி பால்ஸ் ... அப்டின்ன என்னடி அர்த்தம் கோகிலா...'

நரமாமிச பட்சிணிகள்னு அர்த்தம்...'

நரர்கள்ளு அதுலே ஆண் பொண் எல்லாமே அடங்

குமே, நான் சொல்றது அழகிய சுந்தரமான தேஜஸ் நிறைந்த ஆண்களை மட்டும் தானடி!'

  • நீ தேர்ந்தெடுத்த நரமாமுச பட்சிணி! உனக்கு அதுவே சாய்ஸ் இருக்கு. "கஜாரண்ய சுவாமி' மாதிரி யாரையும் மோகிககச் செய்கிற ஓர் அழகிய இளம் சாமியார் உன் போன்றவர்களிடம் தனியே சிக்கினல் என்ன ஆவாரோ? பாவம்'

மன்மதனைப் போல் அழகுள்ள கஜாரண்ய சுவாமிகளின் பெயரைக் கோகிலா சொன்னவுடன் தேஜஸ்வியான

அந்த அழகரின் முகமும் பரந்த இறுகிய மார்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/104&oldid=565772" இலிருந்து மீள்விக்கப்பட்டது