பக்கம்:சுலபா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 • & 601.Jo'.

தோற்றமளிப்போம் என்பதை வெளியே உள்ள கண்ணுடியில் பார்த்தாயிற்று, திருப்திகரமான விடையும் பெற்ருயிற்று. அணியாமல், புனையாமல் - அணிகளையும், புனைவுகளையும் கழற்றிய கைபுனைந்தியற்ருக்'கவின் பெறுவனப்பில் எப்படித் தெரிவோம் என்றதை இங்கே குளியலறையிலே பார்த்தா யிற்று. உறுதி செய்து கொண்டும் ஆயிற்று.

இப்படி எல்லாம் தன்னை அந்நியமாக ஆக்கி அந்நியனு டைய பார்வையிலே எப்படி அழகாயிருப்போம் என்று சமீப காலமாக அவள் பார்த்துக் கொண்டதே இல்லை. இப்படி யாரையும் புதிதாகக் கவர வேண்டிய அவசியமே அவளுக்கு ஏற்பட்டதில்லை. நீண்ட காலத்துக்குப் பின் இந்த ரிஹர்சல்” அவளுக்குத் தேவைப்பட்டது. அநுராக செளந்தரிய ஒத்தி கையை இன்று தனக்குத் தானே அவள் செய்து பார்த்துக் கொன்டாள். .

ஒரு படை எடுப்புக்கு முன் படைகளையும், ஆயுதங்களை யும் சரிபார்க்கிற படைத்தலைவனுடைய நிலையில் இன்று இவள் இருந்தாள். புலன்களிலும், ருசிகளிலும் அவ்வப் போது தோற்கும் சராசரி மனிதர்களுக்கான படை எடுப்பில்லை இது. புலன்களை வென்றவர்களைத் தோல்விக்கு அழைக்கும் புதிய படை எடுப்பு இது. கோகிலாவிடம் சுலபாவே சொல்லிய யது போல்-இது தோற்றவர்களை வெல்லும் முயற்சியில்லை. வென்றவர்களைத் தோற்கச் செய்யும் முயற்சி. ஆகவே அவள் தன் அழகு என்ற இயற்கை அரணையும் புனைவுகள் என்ற சாதனங்களையும் சரிபார்த்து வைத்துக் கொண்டாள். எல்லாப் படைகளையும் வெல்வதற்கு ஆயத்தப்படுத்தி வைத்துக் கொன்டாள்.

"காதலில்...காமத்தில், சந்தோஷம் அடைய வேண்டு மால்ை நன்ருகத் தோற்கவேண்டியிருக்கும்’-என்று கோகிலா சொல்லியிருந்தது நினைவு வந்தது. .

கோகிலா காதலிலும் பக்தியிலும் எந்தத் தரப்பில்

ஆணவமும் தன் முனைப்பும் விஞ்சி நிற்கிறதோ அந்தத் தரப்புத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/108&oldid=565776" இலிருந்து மீள்விக்கப்பட்டது