பக்கம்:சுலபா.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sstr« EIF. 107.

தோற்றுவிடுகிறது என்கிருள். தோற்கிற வெற்றி எது? வெல்கிற தோல்வி எது? என்பது பற்றிக் கோகிலாவின் விளக்கங்கள் சுலபாவுக்குப் புதுமையாகவும் புரியாதவையாக வும் இருந்தன. வருகிற வெள்ளிக்கிழமையன்று தானே வெல்லப்போவது போல் முயன்ருள் சுலபா. ஆளுல் தோற்கப் போவது போல் உணர்ந்தாள். உணர்வும் செயலும் முரண் பட்டன. ஒரு வேளை இந்த விவகாரத்தில் கோகிலா சொல்லு வது போல் தோற்பது தான் வெற்றியோ என்று எண்ணவும் தோன்றியது இவளுக்கு.

பிற்பகல் கழிந்தது. மாலையும் வந்தது. இரவு எட்டு

மணிக்குத்தான் கோகிலாவிடமிருந்து அவள் எதிர்பார்த்த டெலிஃபோன் கால் வந்தது.

"என்னடீ ஆச்சு?" நேரிலே இதோ அங்கே புறப்பட்டு வந்துக்கிட்டே இருக்கேன்.'

காயா? பழமா?"

"ஏறக்குறையப் பழம்தான்...நேரே வந்து எல்லாம் விவரமாச் சொல்றேன்'- -

இருபது நிமிஷத்தில் கோகிலா நேரில் வந்து சேர்ந்தாள். சுலபா கேட்காமல் அவளே திட்டத்தை விவரித்தாள். வேக மாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் ஆவல் பரபரக்கும் மனநிலையொடு செவிமடுத்தாள் சுலபச.

'காரியத்தை ஏறக்குறைய நமக்குச் சாதகமான எல்லை வரை கொண்டுவந்திருக்கேள்: மத்தது உன் சாமர்த்தியம்’

"அப்பிடீன்ன...? கொஞ்சம் விவரமாத்தான் QFrá3ణుత, எனக்குப் புரியலியே?" o -

விவரமாச் சொல்றேன். குறுக்கே பேசாமக் கேட்டுக்கோ! வெள்ளிக் கிழமை காலம்பர நாம ரெண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/109&oldid=565777" இலிருந்து மீள்விக்கப்பட்டது