பக்கம்:சுலபா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

двт «tiи", 9

வட்டrரங்களிலிருந்து தகவல்- என்றெல்லாம் கிசுகிசுக்கள் பிரசுரமாகி அவளுடைய கவர்ச்சியையும் மார்க்கெட்டையும் அதிகமாக்கின. வம்புகள்கூட விளம்பரம் ஆயின.

ஓர் உண்மை அவளுக்கு நன்ருகத் தெரியும். ஒர் இளம் நடிகைக்கு இலட்சக்கணக்கான இரசிகர்களும் பிரபலமும், கவர்ச்சியும் எல்லாம் திருமணமாகி ஓர் ஆண் பிள்ளையின் தாலிக் கயிற்ருல் தொழுவத்தில் கட்டப்படும் வரைதான்.

ஒருத்தனது தாலிக் கயிற்ருல் கட்டப்பட்டபின் அவள் பல ருடைய கனவுலகக் கன்னியாக இருக்க முடியாது. தாலி அவளை மாட்டுத் தொழுவத்தில் கட்டப்படுகின்ற மாட்டைப் போல வீட்டுத் தொழுவத்திலே கட்டிப் போட்டு விடவே பயன் படுகிறது. இவை எல்லாம் அவளது கருத்துக்களாக இருந் தன. ஆளுல் நாளாக ஆக இக் கருத்துக்களில் சில முற்றிக் காம்பின் பிடி தளர்ந்து உதிர்ந்து விட்டன. சுற்றி யுள்ள மனிதர்களின் பொய்கள், புனைவுகள், நடிப்புக்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சுலபாவுக்குள்ளும் சில மாற்றங்கள் உண்டாயின. சிலவற்றில் பிடிவாதங்கள் தானே தளர்ந்தன. வேறு சிலவற்றில் பிடிப்புக்கள் ஏற்பட்டன . தொங்குகிறவன் ஒரு பிடியை விடுவதற்கு முன் வேருென்றைப் பற்றிக் கொள்ளாமல் முந்திய பிடியை விடி முடியாது. அப்படி விட்டால் கீழே விழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

சுலபாவுக்கும் பழைய பிடிகளை விட நினைக்கும் போதே புதிய பிடிப்புக்களை யோசித்துத் தேட வேண்டியதாயிருந்தது. அப்படிப் புதியதைத் தேடாமல் பழையதை விடமுடியவில்லை.

கோடீசுவரர்களாகிய சில தயாரிப்பாளர்கள் அவளை மணந்து கொள்ள ஆசை தெரிவித்தனர். அவர்களுக்கு ஏற் கெனவே மணமாகி இருந்தும் கூட முதல் மனைவியை விரோ தித்துக் கொண்டு கூட இவளோடு இணையத் துடித்தனர். இவளது சொத்து-எதிர் கால வருமானம் எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தங்கப் பறவையை அதன் பெறுமானத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/11&oldid=565679" இலிருந்து மீள்விக்கப்பட்டது