பக்கம்:சுலபா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 115

சந்நிதியில், தரிசனம் செய்கிறபோது உணர்ந்த சந்தனம் பச்சைக் கருப்பூர வாசனை அவளது வழக்கமான ஞாபகங்களைக் கிளரச் செய்தன. அதே புனித வாசனைகளும் பிரம்மசரியத்தின் காந்தியும். தேஜஸும் அழகும் உள்ள ஓர் உடல் அன்றிரவு தனக்கு விளையாடக் கிடைக்கப் போகிறது என்ற உணர்வும் ஏற்பட்டது. அது அநுராகச் சுவையாக உள்ளே தங்கியது.

சகஸ்ர கலசாபிஷேகம் முடிந்து பிரசாதங்கஆளப் பெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பினர்கள். பகல் உணவும் அறைக்கே வந்தது. நேரம் நெருங்க நெருங்கச் சுலபாவுக்குப் பரபரப்பும் பூரிப்பும் ஆவலும் கிளர்ந்தன. மனசு நிலை கொள்ளாமல் தவித்தது.

‘என்ன உடுத்திக் கொண்டு போவது? எதை எதை அணிவது?-என்று சுலபா அதிகமாக அலட்டிக் கொள்வதைப் பார்த்துக் கோகிலா அவளைக் கிண்டல் செய்தாள்.

'கோவில் திருவிழாவுக்காக அம்மன் விக்கிரகத்தை ஓவராக அலங்கரிக்கிற மாதிரி ஒரேயடியாக அலங்கரித்துக் கொண்டால் உன் இயற்கையான வசீகரமே தெரியாது. சிம்பிளாக - உன் அழகே அதிகம் தெரிகிறமாதிரி - நகைகள்புடைவை பவுடர் முதலியளை உன்னைவிட அழகாகத் தோன்றி அதிகப் பிரசங்கித்தனம் பண்ணுத வகையில் போய் நில்! வெள்ளைவாயில் புடைவை. உன் தங்க நிறக் கழுத்தின் பொன் வண்ணத்தை எடுத்துக் காட்டுகிற மாதிரி ஒரு மெல்லிய கருகமணிமாலை, தோடு, மூக்குத்தி - நீ விரும்பினல் காலில்

கொலுசு கைகளுக்குக் கருநிறக் கண்ணுடி வளையல்கள். இவை போதும்.' r -

"பட்டுப் புடைவை வேண்டாமென்கிருயா?.

வேண்டிவே வேண்டாம் உன் உடம்பே மழமழப்பான வெண்பட்டுக் குவியல் மாதிரி ஒரு பட்டில் இன்னொரு பட்டு நிற்காது.” ་ ་ ་ ེ་ ་ ་ ་ ་ ལ ། ། ་ བ ་ ་ ད ང ་

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/117&oldid=565785" இலிருந்து மீள்விக்கப்பட்டது