பக்கம்:சுலபா.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 11?

காமம் கனிந்து திரண்ட எல்லாப் பேரழகுமே எரியும் நெருப்புத்தான்! இங்கு உன் அழகுதான் அக்னி.'

"நான் நீறு பூத்த நெருப்புத்தான் கோகிலா! என்னல் எரிக்க முடியுமா?" , -

"உன்னல் முடியுமோ முடியாதேச; உன் அழகால், சிரிப்பால் விழியால், அங்க வனப்பால் எதிரே நிற்கிறவனின் பிரம்மசரி யத்தை எரித்துப் பொசுக்கி விடமுடியும்.'

ஜல்லிக்கட்டுக்குப் போசிற பந்தயக் காளையைக் கொம்பு சீவி எண்ணெய் பூசி முட்டுவதற்கான வெறியூட்டி அனுப்புகிற மாதிரிச் சுலபாவைத் தயாராக்கினுள் கோகிலா.

மாலை மணி ஐந்து. சுலபா மறுபடி நீராடினள். கோகிலா சொல்லியிருந்தபடி எளிமையாக அலங்கரித்துக் கொண்டாள், வந்து நின்ருள். பார்த்துவிட்டுக் கோகிலா சொன்னுள்: 'சபாஷ்! இப்படியே வரியணைத்துக் கொள்ளணும் போலி ருக்கிருய்! இப்படி வென்மை நிறம் சந்நியாசிகளுக்கு எப் போதுமே பிடிக்கும்.'

'எனக்குக் காவி நிறம் ரொம்பக் கவர்ச்சிடி கோகிலா.' "ரொம்பப் பொருத்தம்! வெண்மையில் அவி சேர்ந்தால் சரியாக ஒட்டிக் கொள்ளும்.'

என்னென்ன எடுத்துக் கொள்ளணும்? கோகிலா!' "முதலில் நீ மறந்து விடாமல் உன்னை எடுத்துக் கொள்! கைப்பையில் கையெழுத்திட்டுத் தேதி போட்டுத் தொகை போடாத ஒரே ஒரு செக் லீஃப் மட்டும் வைத்துக் கொள்! வேறு எதுவும் வேண்டாம்! எல்லாவற்றையும் இங்கே அறையி லேயே விட்டு விடு. வீண் சுமை எதுவும் வேண்டிாம்.'

"மாற்றுப் புடைவை ஒன்று வேண்டாமா?" . - இதைக் கேட்டு கோகிலா குறும்புத்தனமாகச் சிரித்தாள். அவள் விழிகளில் குறும்பு மின்னியது.

क-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/119&oldid=565787" இலிருந்து மீள்விக்கப்பட்டது