பக்கம்:சுலபா.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 తొ;ఖ}ur

யும்,விலைமதிப்பையும் கணித்து விட்டு அவர்கள் சிறைப்பிடிக்க ஆசைப்படுவது அவளுக்குப் புரிந்தது. வேறு சில நடிகர்கள், வருகிற பத்து ஆண்டுகளுக்குத் தங்களோடு நடிக்க வகையாக ஒரு கதாநாயகி அகப்பட்டாள் என்கிற நைப்பாசையில் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதன் மூலம் அல்லது கட்டா மலே அவளை மனைவியாக்கிக் கொள்ள முயன்று அவளிடம் தோற்றது தான் கன்.பலன். எல்லாருடைய நைப்பாசை யும் தந்திரமும் அவளுக்குப் புரிந்தன. சுற்றிலும் ஒரே பொய்யும் புனை சுருட்டுமாக இருந்ததே ஒழிய நிஜம் கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் தென்படவே இல்லை. வீடு வாசல் கள், தியேட்டர், என்றும் ரொக்கம் என்றும் அவளிடம் பயங்கர மான சொத்துச் சேர்ந்திருந்தது. தன்னை நெருங்குகிறவர்கள் அழகுக்காக நெருங்குகிருர்களா, சொத்துக்காக நெருங்கு கிருர்களா என்ற பயம் சுலபாவுக்கு இருந்தது. சந்தேகங் களும் ஏற்பட்டன. எச்சரிக்கையும் ஏற்பட்டது.

அது பயமா. தற்காப்பா,என்று அவளுக்கே சமயா சமயங் களில் குழப்பமாக இருந்தது. புகழுரைகளாக வரும் கடிதங் களிலிருந்து நேரில் பேசுகிறவர்கள் வரை யாரையும், எதை யும் நம்பி விடமுடியாமல் இருந்தது. எதுவரை நிஜம், எதற்கு மேல் பொய் என்று தெரிவது சிரமமாயிருந்தது.

எதிர்ப்படும் ஒவ்வொரு புகழ்ச்சியிலும் ஓர் உள்நோக்கம் இருந்தது. அவளுக்கு அநுபவமும், பொறுப்பும் ஏறஏறப் புகழுரைகளை வேர்வையையும் அழுக்கையும் துடைத்தெறிவது போல் மேலாகத் துடைத்தெறியக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அது தவிர்க்க முடியாததாகிப் போயி ருந்தது.

இளமை அநுபவங்கள் அவளுக்கு அதைக் கற்றுக்கொடுத் திருந்தன. புகழ்ந்து புகழ்ந்தே அவளைச் சீரழித்திருந்தார் கள் u೧ುಗೆ. இன்று அது அவளுக்குப் புரிந்தது.

சிறுவயதில் அரும்பாக இருந்த போதே அவளைச் சினிமா வில் சேர்த்து விடுவதாகச் சென்னைக்கு அழைத்துவந்து அவளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/12&oldid=565680" இலிருந்து மீள்விக்கப்பட்டது