பக்கம்:சுலபா.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gr.EIT. 119

"நான் என்ன பேச முடியும்? இந்த மாதிரிப் படித்த ஞானியிடம் நான் பேச என்ன அகப்படும் கோகிலா!' -

"உன் கஷ்டங்களைச் சொல்! அறிவுரை கேள். பிரமா மான காதல்களை இரக்கம்தான் உண்டாக்குகிறது." * }

| 9

இவனுந்தரமாக மண்டிக்கிடந்த அந்த மாந்தோப்புக்குப் பிரதான சாலையிலிருந்து விலகிய செம்மண் புழுதி படிந்த கிளைச்சாலைக்குள் இவர்களது பென்ஸ் திரும்பியபோது மாலை ஆறேமுக்கால் மணி- காட்டுக்கே உரிய பச்சை வாசனையும். சிள் வண்டுகளின் கீங்கீஸ் ஒலியும் ஆரம்பமாகிவிட்டன. சுலபாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஏதோ ஒரு சுகமான தவற்றைச் செய்யத் துணிந்து விட்டா லும் அதைச் செய்யக்கூடாது என்று ஒரு கணமும் செய்து சுகம் காணவேண்டும் என்று மறு கணமுமாக மாறி மாறித் தோன்றின. மாந்தோப்பின் அருகே ஓடை நீர் சலசலக்கும் ஒலி ஜலதரங்கமாய் ஒலித்தது. ஆகாயம் நீலப்படுதாவாய் மேலே விரிந்து கிடந்தது. ஒரு கர்மயோகி போல் காரை ம்ாந்தோப்பின் முகப்பில் நிறுத்தி விட்டு எந்தப் பதற்றமும் இல்லாத குரலில், - - " , , , . . و

'சுலபா வா! வலது காலை முன் வைத்து இறங்கு - என்று மணப்பெண்ணுக்குச் சொல்வது போல் சொல்லி அவளை இறக்கி அழைத்துக் கொண்டு உள்ளே ஒற்றையடிப் பாதையில் சென்ருள் கோகிலா.

இவர்களது கார் நின்ற இடத்திலிருந்து பத்து நிமிஷம் ஒற்றையடிப் பாதையில் நடக்க வேண்டியிருந்தது. அந்த ஒற்றையடிப்பாதை கொஞ்சம் மேடாயிருந்த பகுதியிலிருந்த ஒரு குடில் போன்ற சிறிய கட்டிடத்துக்கு இட்டுச் சென்றது, கீழே சற்றுப் பள்ளத்தாக்கான பகுதியில் ஹாஸ்டில் போலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/121&oldid=565789" இலிருந்து மீள்விக்கப்பட்டது