பக்கம்:சுலபா.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bir Lig 128

விரசமான எண்ணமே வராத தெய்வீக முக ராசியுள்ள ஒரு பெண் மணி எனக்குத் தேவை. உன்னைப் பார்த்தால் அப்படி முகராசி தெரிகிறது. என்ைேடு இந்தப் பணியில் ஈடுபடும் துணிவு உனக்கு வருவா? எந்த ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால் எனக்கே என் தாயின் முன் நிற்பது போன்ற உணர்வு வருகிறதோ அப்படி ஒரு முகம் உனக்கு இருக்கிறது!" ‘. .

சுவாமி! நிஜமாகவா? ஆண்களின் சாலங்களில் நைந்த முகத்தைப் பார்த்தா இப்படிச் சொல்கிறீர்கள்...'

  • உன் முகத்தில் ஓர் ஆசிரமத்தின் அன்னையைப் பார்க் கிறேன். இந்தத் திவ்யசேவாசிரமம் இதன் அன்னையாக உன்னை அழைத்தால் நீ வருவாயா பெண்னே?"

"நாளு?... இந்தப் பாவ ஜென்மமா?"

"வீணுகச் சுயநிந்தனை செய்து கொள்ளதே! எந்த நிமிஷம் இந்த ஆசிரமத்தின் அன்னையாக வரச் சம்மதிக் கிருயோ அந்த நிமிஷமே உன் கோலம் மாறவேண்டும். எளிய காவிநிறச் சேலை. இங்கேயே இந்த அலமாரியில் அப்படிச் சேலைகள் நிறைய வாங்கி வைத்திருக்கிருேம். சேருகிற பெண் களுக்கு இங்கே அது தான் யூனிஃபாரம். நீயும் அதை அணிய வேண்டும். நகைகள், ஆடம்ப்ரங்கள் கூடாது! இந்தப் பணியை விடத் தொகை போடாத உன் செக் கூடி எனக்குப் பெரிதில்லை." : : . .

சயோசிக்க நேரம் கொடுங்கள். 語影

"பணக்காரர்களால் யோசிக்காமல் நல்லது கூடச் செய்ய முடியாது. காரை விட்டுவிட, பங்களாவை விட்டுவிட பணத்தை விட்டுவிட மமதையை விட்டுவிட எல்லாவற்றுக்கும் யோசிக்க வேண்டும். யோசித்தபின் விட முடியாது. விட்டியின் யோசித்துப் பயனில்லை. நான் கூட விஜயவாடாவில் ஒரு கோடிசுவரனின் ஒரே மகளுகப் பிறந்தேன். யோசிக்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/125&oldid=565793" இலிருந்து மீள்விக்கப்பட்டது