பக்கம்:சுலபா.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1盛生 &#8); of

திடீரெனக் கல்லூரிப்படிப்பு முடிந்ததும் ஒரு நாள் இப்படிச் சாமியாரானேன். ஐந்து நிமிஷ மெளனத்தின் பின் மீண்டும் அவரே கூறினர்:

"நல்லது செய்ய யோசிப்பதற்குள் சிலசமயம் நம் வாழ்வே

முடிந்து போய் விடுகிறது! முடிவதற்குள் ஆரம்பிக்க வேண்டும் நாம்,'

சுலபாவுக்குத் தான் எதற்காக அங்கே வந்தோம் என்பதே வேகமாக மறந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த தீப்பிழம் பின் வேகத்தில் உள்ளே சில எரிந்தன. பொசுங்கிப் பொடிப் பொடியாயின,

அவர் பேசிக் கொண்டிருந்தபோதே குழந்தைபோல் துரங்கி விட்டார் அங்கே. வெறும் தரையில்-அப்படியே வலது கையை மடித்துவைத்துக் கொண்டு தூங்கும் அந்தச் சுந்தர புகுஷனின் அருகே நெருங்கி நடுங்கும் கைகளிளுல் தன் மடியில் தலையை எடுத்து வைத்துக் கொண்டாள் அவள்.

சாட்சrத் திருப்பதிப் பெருமா8ளயே எடுத்து மடியில் கிடத்திக் கொள்வது போலிருந்தது. .

20

பொழுது விடிவதற்கு இன்னும் சில நாழிகைகள் இருந்தன. கருப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?- என்று பாவித்தபடியே அந்தச் சந்தனம் மணக்கும் சிரசைத் தன் மடியிலிருந்து தரையில் அலுங்காமல் எடுத்துவிட்டு உறங்கச் செய்து பின் சுலபா எழுந்திருத்தாள். இப்போது அவள் மனசில் பாரமோ பரிதவிப்போ இல்லை. வெளியேயும் அவளுள்ளேயும் விடிந்து கொண்டிருந்தது. அங்கே குடிலிலி லிருந்தே பின்புறமாக ஒடைக்கு இறங்குவதற்கு வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/126&oldid=565794" இலிருந்து மீள்விக்கப்பட்டது