பக்கம்:சுலபா.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 135

இருந்தது. கை வளைகள், கழுத்துமணி, மோதிரம், தோடு, மூக்குத்தி எல்லாவற்றையும் ஒவ்வொன்ருகக் களைந்து குடிலினுள் வைத்து நீராடி வரச் சென்ருள். திரும்பி வந்து அவர் முந்திய இரவில் சுட்டிக் காட்டியிருந்த அந்த அலமாரி யைத் திறந்து அந்த ஆசிரமப் பெண்கள் கட்டும் யூனிஃபாச மான சிவப்பு நிறச் சேலையில் ஒன்றை எடுத்துத் தானும் அணிந்தாள், கருமை மின்னும் ஈரக் கூந்தல் பிடிரியில் புரண்டது.

அப்போது திவ்யானந்தர் கண்விழித்து எழுந்திருந்தார். இன்னும் இருள் முழு அளவில் பிரியவில்லை. மங்கிய விளக் கொளியில் காவிஉடையில் அவளைப் பார்த்த அவர் இதமான குரலில் மெல்ல வினவிஞர்:

"யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டாய் என்று நினைக்கிறேன்."

" யோசித்து முடிக்கவில்லை! முடிவதற்குள் யோசித்து விட்டேன்." - .

"உனது தொகை போடாத செக்கை விடப் பெரியது இது. பணதானத்தை விடி சிரமதானம் எனக்குப் பிடிக்கும்.'

அவர் நீராடச் சென்ரும்.

கோகிலா வருகிற நேரமாயிற்று. சுலபா அவளை எதிர் கொள்ள முகப்பை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்தாள். இப்போது அவள் மனம் பூப்போல் மிருதுவாயிருந்தது. சுற்றிலும் அங்கங்கே மலர்ந்து கொண்டிருந்த பவழமல்லிகைப் பூக்கள் இவளுடைய இருதயத்துக்குவி முந்திய இரவே மலர்ந்: திருந்தன. மணம் பரப்பின. .. -

அந்த மாந்தோப்பு, அதன் குளிர்ச்சி, அதன் சமுதாயப் பணி, அதன் தொண்டுகள் எல்லாமாகத் திடீரென்று அவளு டைய மனத்தில் மரியாதைக்குரியதொரு மூப்பையும், தாய்மை யையும் கொண்டு வந்திருந்தன. திடீரென்று ஒரே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/127&oldid=565795" இலிருந்து மீள்விக்கப்பட்டது