பக்கம்:சுலபா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்கவி லாபம் தருகிருள்

பையன்கள் மேல் சிவவடிவேலுவுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய அணுகுமுறைகள் பையன்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே தகராறு முற்றி, மூத்தவன் தனியே போய்விட்டான். மூத்த மகன்தான் இப்படி என்ருல் இளையவன் பாகவதர் தலையும் கிருதாவும் வைத்துக் கொண்டு பட்டி மண்டபம், கவியரங்கம் என்று அலைந்து கொண்டிருந் தான். மகள் சாது. வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மகன்கள், மகள், மனைவி யாரையும் பெரியவர் நம்பவில்லை, பெரியவரை அவர்களும் நம்பவில்லை. ஒரு கூடை செங்கல்லும் பிடிாரி என்பார் அவர்.

இதன் விளைவு? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து தொடங்கிய தொழில் முழுகிவிடும் போலிருந்தது. தொட்டதெல்லாம் நஷ்டிப்பட்டது. ஆடிட்டிர் எச்சரிக்கை செய்தார்:

இதை இப்படியே விடக்கூடாது. நஷ்டம் பயங்கரமாக இருக்கிறது. திவாலாகி விடும். வாங்கின கடனுக்கும் முதலீட்டுக்கும் வட்டிகூடக் கட்ட முடியாமே இதை நடத்தற திலே பிரயோசனமில்லே. ஏதாவது நடிவடிக்கை உடனே எடுத்தாகணும்." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/131&oldid=565799" இலிருந்து மீள்விக்கப்பட்டது