பக்கம்:சுலபா.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

brilir. 131

நாட்டில் அந்த வேளையில் உச்சவரம்புச் சட்டம் வர இருந்தாலும் ஆடிட்டர் யோசனை சொன்னதாலும்தான் சிவ வடிவேலு இந்த முடிவை எடுத்தார். ஒட்டல் கட்டினர்.

ஜமீன் குருபுரத்திற்கு அருகே ஒரு மலைத் தொடரில் வரப் பிரசாதியான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருந்தது. அடி வாரத்தில் இருந்த பெரிய ஊரான குருபுரத்துக்கு வந்துதான் அங்கே செல்ல முடியும். மலையடிவாரத்திலிருந்து வளைந்து நெளிந்து சுற்றிச் சுற்றி மலை மேல் ஏறும் காம்செக்ஷன்"சாலை யில் முப்பது கிலோமீட்டர்பயணம்செய்துதான் ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடியும். மலை மேல் தங்க வசதிகள் எதுவும் கிடை யாது. குருபுரத்தில் வந்து தங்கித்தான் போயாக வேண்டி யிருந்தது. மிளகாய், காய்கறி, நெல், ஏலக்காய் ஆகிய மொத்த வியாபாரத்துக்கான மண்டிகள் பல இருந்ததனால் கொள்முதலுக்காகத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் அடிக்கடி வந்து போனார்கள். அவர்களுக்கும் ஒரு நல்ல ஒட்டல் தேவை யாயிருந்தது. ஊரைச் சுற்றிலும் முந்திரிக் காடு, மலை மேல் ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், தேயிலை, காப்பி என்று வாசனைப் பொருள்களும் ஏற்றுமதி அயிட்டங்களும் விளைந்தன. பணப் புழக்கம் உள்ள பிரதேசமாகத்தான் இருந்தது.

பெரியவர் சிவவடிவேலுவுக்கும் மலை மேல் எஸ்டேட் இருந்தது. எஸ்டேடிடிை அப்படியே வைத்துக் கொண்டு. நிலங்களில் சட்டத்திற்கு அதிகமாக இருந்ததை விற்று. மேற் கொண்டு கடனும் வாங்கித்தான் ஒட்டல் பார்கவியைக் கட்டி யிருந்தார். கொஞ்சம் தாராளமாகவே செலவழித்துக் கட்டி விட்டார். -

ஆல்ை போர்டிங் வகையிலும் நஷ்டிம், லாட்ஜிங்" வகையிலும் நஷ்டம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு விரக்தியில், கிடைத்த விலையை வாங்கிக் கொண்டு பார் கவி'யை விற்றுவிடலாம் என்று கூட முடிவு செய்தார். மதுரை யிலோ, கோவையிலோ, இப்படி ஓர் ஒட்டில் விலைக்கு வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/133&oldid=565801" இலிருந்து மீள்விக்கப்பட்டது