பக்கம்:சுலபா.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pir. Cir. 188

'ஆடிட்டர் சார்! எனக்கு என்னமோ இதெல்லாம் அவசியம்தானான்னு சந்தேகமா இருக்கு. ஆனல் நீங்க சொல்றப்போ நான் தட்டிச் சொல்ல முடியாது. பல வருஷமா எங்க குடும்பு வரவு செலவு உங்களுக்கு நல்லாத் தெரியும். நீங்க எது சொன்னலும் அது என் நன்மைக்காகத்தான் இருக்கும்னு ஒப்புக்கறேன். ரொம்பச் செலவு இழுத்து விட்டு டாமப் பார்த்துக்குங்க. சிக்கனமா இருந்து லாபம் சம்பாதிக்க வழி என்னன்னு ஒருத்தனைக் கூப்பிட்டு யோசனைக் கேட்கப் போய் அதைக் கண்டுபிடிக்க அவனும் நாமுமாக ஊதாரிச் செலவு பண்ணின கதையா ஆயிடக்கூடாது' என்று கவலைப்பட்டார் சிவவடிவேலு.

"அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது. கவலைப் படாதீங்க. நான் இன்னிக்கே குப்தாவுக்கு லெட்டர் எழுதிடறேன். சீக்கிரமா அவனை வரவழைச்சிடலாம்' என்ருர் ஆடிட்டர்,

2

பிஸினஸ் டாக்டர் சந்திரஜித் குப்தாவுக்குச் சிவவடி வேலுவின் ஆடிட்டர் கடிதம் எழுதினர். மூன்றே நாட்களில் குப்தாவிடமிருந்து பதில் வந்துவிட்டது. சாதகமான பதில் தான். - -

தான் அப்போது பம்பாயில் ஒரு ஸிக் இன்டஸ்ட்ரிஅதாவது நொடித்து நோய்வாய்ப்பட்ட தொழிலைச் சரிசெய்ய ஆப்ஸர்வேஷனுக்காகப் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த மாதம் முழுவதும் அது சம்பந்தமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான் குருபுரம் வர முடியும் என்றும் குப்தா பதில் எழுதி யிருந்தான். தள்ளுேடு தன் மனைவியும் வரக்கூடும் என்று அவன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். விமானப் பயண டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டிருந்தான்.

சு-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/135&oldid=565803" இலிருந்து மீள்விக்கப்பட்டது