பக்கம்:சுலபா.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 187

கும் அவருக்கும் சண்டையோ வாக்குவாதமோ ஏற்படாத தற்குக் காரணம் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. கடைக்குடடியானதால் அவளிடம் அவருக்குப் பிரியமும் அதிகம் பாசமும் நிறைய இருந்தது.

குடும்ப ஆடிட்டர் அனந்த் அந்தக் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக வேண்டியவர், என்றாலும் சிவவடிவேலுவைப் பற்றி அவருக்கும் உள்ளூர விமரிசனங்கள் உண்டு. பட்டும் படாமலும்தான் இருப்பார். ஆளுல் ஒட்டல் பார்கவி விஷயத் தில் அவரால் அப்படி இருந்துவிட மூடியவில்லை. காரணம், அது அவர் கூறிய யோசனைப்படி கட்டப்பட்டது.

ஆடிட்டர் அனந்த், சிவவடிவேலு. அவர் மகள் மூவரும் மதுரை விமான நிலையத்தின் அரைவல் லவுன்ஜில் குப்தாவை யும் திருமதி குப்தாவையும் வரவேற்கக் காத்திருந்தார்கள். விமானம் தரையிறங்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது. ஆடிட்டர் வற்புறுத்தியதால் வாங்கப்பட்ட இரண்டு மல்லிகை மாலைகள் தயாராயிருந்தன,

"மாலை எல்லாம் எதுக்கு? நாம நஷ்டத்திலே சிரமப் பட்டுகிட்டிருக்கோம்னு வர்றவனுக்குப் புரியட்டுமே? மாலை கீலைன்னு தடபுடலாப் பண்ணிட்டம்னு செழிப்பா இருக் கோம்னு நினைச்சுடப் போறாங்க" என்ருர் சிவவடிவேலு.

ஆடிட்டர் இதைக் கேட்டுச் சிரித்தார். சிவவடிவேலுவின் தழும்பேறிப்போன கட்டுப்பெட்டித்தனத்தைப் போக்கவே முடியாது போலிருந்தது.

'கஷ்டிநஷ்டங்கள் வேறே. கர்டிஸி வேறே. நாம நஷ்டப் படறோம்கிறதுக்காக இருபத்து நாலு மணி நேரமும் அழுது கிட்டே இருக்கணும்னு அவசியம் இல்லே. நாமும் சந்தோஷ மாயிருக்கணும், அடுத்தவங்களையும் சத்தோஷப்படுத்தணும்' என்ருர் ஆடிட்டர். இப்படி ஒவ்வொன்றிலும் சிவவடிவேலுவை ஒழுங்குபடுத்தித் தயாராக்க வேண்டியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/139&oldid=565807" இலிருந்து மீள்விக்கப்பட்டது