பக்கம்:சுலபா.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pr •rir • 189

சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுத்துவிட்டு வரவேண்டும். எல்லாமே ராயர்தான்.

குப்தாவுக்குத் தாம் கடிதம் எழுதி வரவழைத்திருந்ததால் அவனுடைய செளகரியங்களைக் கவனிக்கும் பொறுப்புத் தமக்கு இருப்பதாக ஆடிட்டர் எண்ணிஞர். சிவவடிவேலு ஹில்டன் ஒபராய்க்குச் சமமாக வர்ணித்த அந்த ராயர் தன்னிர்ப் பந்தலுக்கு அவரது மகன் குமரேசன் போன்றவர் கள் சூட்டியிருந்த செல்லப் பெயர் கையேந்தி பவன்' என்பது,

குருபுரம் மிராசுதார் சிவவடிவேலுவின் நோய்கள்" என்னென்ன என்று ஆடிட்டர் அனந்துக்கே நன்ருகத் தெரியும் என்ருலும் தம்மைப் போல் பல ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழககிற ஒருவரால் அவரை மாற்ற முடியாது என்பதால்தான் பிஸினஸ் டாக்டர் என்ற பெரிய பெயரெடுத்த ஆள் ஒருவரை டில்லியிலிருந்து வரவழைத்திருந்தார். நில உச்சவரம்பிலிருந்து சொத்துக்களையும் பணத்தையும் காப்பாற் றிக் கொள்ள அவசர அவசரமாக ஒட்டல் "பார்கவி"யை நவீனமாகக் கட்டி விட்டார். ஆனால், அதில் நவீனமான ஏற்பாடுகள் அறவே இல்லை. நாட்டுப்புறத் தன்மையே, அதிகமாக இருந்தது அங்கே. ' ' -

ஜமீன் குருபுரம் செங்கழுநீர் விநாயகர் கோயில் தெருவில் இருக்கும் ஆதிகாலத்து அசல் சைவாள் போஜன சாலை’ என்ற அழுக்கடைந்த போர்டுடன் கூடிய-காலையில் வெந்நீர்ப் பழையதும், வடுமாங்காய் ஊறுகாயும், மாலையில் இடியாப்ப மும் தேங்காய்ப் பாலும் கிடைக்கிற ஒன்ரு ஓட்டல் பார்கவி. இருக்க முடியாது. கூடாது என்பது ஆடிட்டரின் திடமான கருத்து. சிவவடிவேலுவின் பிள்ளைகளும் ஆடிட்டரைப் போலவே நினைத்தார்கள். ஆனல் சிவவடிவேலு மட்டும் பழையபடியே இருந்தார். பார்கவி'யில் பயங்கர நஷ்டம் வந்தது. தாம் படு சிக்கனமாக எல்லாக் காரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தும் எப்படி நஷ்டம் வருகிறது என்று அவருக்குப் புரியவில்லை. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/141&oldid=565809" இலிருந்து மீள்விக்கப்பட்டது