பக்கம்:சுலபா.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. - 147

அனுப்ப முடியாது என்று திருமதி சிவவடிவேலு பிடிவாதம் பிடிக்கிருள். அந்தம்மாளுடைய வேண்டுகோளுக்காகவாவது நீங்கள் இன்று பிற்பகல் வரை இங்கே வீட்டில் தங்கியாக வேண்டியது அவசியம்.’’ என்று மன்ருடி ஆடிட்டர் குப்தாவைச் சம்மதிக்க வைக்க வேண்டியதாயிற்று.

"மரணப்படுக்கையில் சாகக் கிடக்கிற ஒரு நோயாளிக்கு வைத்தியம் செய்ய வருகிற டாக்டர் நடுவழியில் தங்கவோ ஓய்வு எடுக்கவோ, உபசரணைகளை ஏற்கவோ முடியாது. நோயாளியை எவ்வளவு விரைந்து காப்பாற்ற முடியுமோ அவ்வளவு விரைந்து காப்பாற்றுவதே அவரது முதல் வேலை யாக இருக்க வேண்டும். எனக்கும் அது பொருந்தும். எனது நோயாளியை நான் முதலில் அட்டெண்ட் செய்து தீரவேண் டும். மற்றதெல்லாம் அப்புறம்தான்.' என்று கருராக வாதித் தான் குப்தா. ஆடிட்டிருக்கும் அவன் சொல்வது நியாய மென்றே பட்டது.

ஆளுல் குப்தா வைத்தியம் செய்ய வேண்டிய நோயாளி ஓட்டல் பார்கவியா, அல்லது மிஸ்டர் சிவவடிவேலுவா என்பதைத்தான் ஆடிட்டரால் தீர்மானமாகத் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது,

ஒட்டல் பார்கவி என்ற தாவர ஜங்கம சொத்துக்கு மருந்து கொடுத்து வைத்தியம் செய்ய முடியாது. சிவவடிவேலுவோ

மருந்து சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் முரட்டுக் குழந்தை போன்றவர். என்ன செய்வது?

குப்தா எவ்வளவுக்கெவ்வளவு ஒட்டில் பார்கவியின் ஆரோக்கியக் குறைவைப் பற்றிக் கவலைப்பட்டானே, அவ்வளவுக்கவ்வளவு திருமதி குப்தா. குமாரி பார்கவியின் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட்டாள். அவளுக்குச் சிவவடிவேலுவின் மகள் பார்கவியை மிகவும் பிடித்து விட்டது.

"இந்த வயசிலே நீ இப்படி நோயாளித் தோற்றத்தோடு முடங்கிக் கிடிக்கக் கூடிாதடி பென்னே! புள்ளிமான் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/149&oldid=565817" இலிருந்து மீள்விக்கப்பட்டது