பக்கம்:சுலபா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 151.

கள். புதிய வாட்டர் ஹீட்டர்களில் முதல் வருடமே ரிப்பேர் ஆக வாய்ப்பில்லை. ஆனால் ரிப்பேர் பில்கள் ரசீதுகள் சரியா யிருந்தன.

ரிப்பேர் பில்கள் ரசீதுகளில் ஒரே குறிப்பிட்ட எலெக்ட்ரிகல் சப்ளையர் பெயர் இருந்தது. எப்படி எப்படியோ உளவறிந்த தில் அந்தக் கம்பெனி வெறும் பில்கள் ரசீதுகள் மட்டுமே கொடுத்து ஹோட்டல் பார்கவி மானேஜருடன் தொகையைப் பங்கிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வகையில் பயங்கர மோசடி இருந்தது. - -

தம் சொந்த மகன்களைக் கூட நம்ம மறுத்த சிவவடிவேலு விசுவாசமான ஆட்கள் என்று நம்பிக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வைத்திருந்த அதிகப் படிப்பில்லாத ஆட்கள் புகுந்து விளையாடியிருந்தனர்.

சிவவடிவேலு நிலங்கரைகளைக் கவனித்து வந்த தமக்குப் பழக்கமான விவசாயக் குடும்பத்து ஆட்களை நம்பி எல்லாம் விட்டிருக்கிறார். அவருடைய குருட்டுக் கணக்கு தெய்வ பக்தியுள்ள அதிகப் படிப்பில்லாத, நடுத்தரக் குடும்பத்து ஆட் கள் தப்புத் தண்டாவுக்குப் போக மாட்டார்கள் என்பது, அந்த நம்பிக்கையிலேயே ஏமாந்து விட்டார். சரியான முறையில் அவர் கணிக்கவில்லை, என்ருர் ஆடிட்டர்.

உடனே குப்தா, சிவவடிவேலுவின் மூத்த மகனைப் பற்றி விசாரித்தான். - - -

"தண்டபாணி-தங்கமான பையன். நல்லசுறுசுறுப்பு. பி.காம். படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ் பண்ணினான். இவ ரோட பிசுநாறித்தனங்கள் பிடிக்காமல் காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டு டில்லியில் போய் உத்தியோகம் பார்க் கிருஸ்,' என்று ஆடிட்டர் கூறியவுடன், "மற்ருெகு பையனைப் பற்றியும் சொல்லுங்கள்,' என்று குப்தா ஆவலாக விசாரித் தான். ஆடிட்டர் குமரேசனைப் பற்றியும் அவனுக்குச் சொன் ஞா - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/153&oldid=565821" இலிருந்து மீள்விக்கப்பட்டது