பக்கம்:சுலபா.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156. பார்கவி

'நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி. சிவவடிவேலுவுக்கு இதெல்லாம் புரியறதே கஷ்டம். முதல்லே நாம பேசி முடிவு பண்ணி அப்புறம் அவருக்குப் பக்குவமா எல்லாம் சொல்லணும், நீங்க மேலே சொல்லுங்க, கேரி ஆன். ú6የ6ù!”” -

'நீட்நெஸ்-சுத்தம். இதுக்காகச் சர்வருங்களுக்கு நாமே வொயிட் ஃபுல் பாண்ட்டும் சட்டையும் சீருடையாகத் தைத்துக் கொடுத்துவிட வேண்டும். செலவானுலும் பரவாயில்லே. செலவாகுமேன்னு பயந்தால் லாபம் சம்பாதிக்க முடியாது. ஹோட்டல் தொழிலிலேயும் சினிமாத் தயாரிப்புத் தொழிலி லேயும் எவ்வளவுக்கு எவ்வளவு தாராளமாகச் செலவழிக் கிருேமோ அவ்வளவுக்கவ்வளவு லாபம் எதிர்பார்க்கலாம். சிக்கனமாகச் செலவழிச்சா லாபமும் சிக்கனமாகத்தான் இருக்கும். இஃப் யூ வான்ட் டு கெய்ன் மோர், யூ ஹாவ் டு லூஸ் மோர்," என்பதுதான் புதிய யுகத்தின் பிஸினெஸ் கான்ஸெப்ட். கேட்டரிங் டிப்ளமா உள்ளவங்களாகப் பார்த்து வேலைக்கு எடுக்கணும். சம்பளம் கூட ஆகுமேன்னு பார்த்தால் முடியாது. ஹோட்டல் இண்டிரியர் டெகரேஷன் எக்ஸ்பெர்ட் ஒருத்தரை நானே டில்லியிலிருந்து அனுப்பறேன்.""

"புதிதாக மணி இன்வால்வ்மெண்ட் இருக்குமாளுல் சிவவடிவேலு தயங்குவார். ஏற்கெனவே கடன் இருக்கிறது.'

"துணிந்து இறங்கப் பயப்படுகிறவன் வியாபாரம் பண்ண முடியாது, ரிஸ்க் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறவன் பிஸினஸுக்கு லாயக்கில்லை. என் சிகிச்சை முறைகளை ஏற்றுச் செயல்பட்டிால் ஒரு வருஷத்திலேயே பயங்கர லாபம் பார்க்கலாம். அதோடு இன்னெரு விஷயம். சிவவடிவேலுவின் இரண்டாவது மகனைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவை. அவன் ஏதாவது இதில் நமக்கு உதவ முடியுமா என்று பார்க்க வேன்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/158&oldid=565826" இலிருந்து மீள்விக்கப்பட்டது