பக்கம்:சுலபா.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 157

"பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து முடித்துவிட்டு மேடை களில் தமிழில் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிருன். முற் போக்குவாதி தந்தையோடு அறவே ஒத்துப் போகாது."

"கொயட் இண்ட்ரெஸ்டிங். அவனை நான் சந்திக்க வேண்டுமே?' என்ருன் குப்தா. -

குமரேசனை இவர் சந்தித்து என்ன ஆகப் போகிறது என்று ஆடிட்டர் தயங்கிலுைம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை அழைத்து வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினர்.

6

குமரேசனைக் குருபுரம் முத்தமிழ் மன்ற மேடையில் பட்டிமன்றப் பேச்சின் நடுவே போய்ப் பிடித்தார் ஆடிட்டர் அனந்த். மனித வாழ்க்கைக்கு முக்கியம் பொருளா அருளா என்ற பட்டிமன்றத்தை அரை மணி நேரம் உட்கார்ந்து பொறுமையோடு கேட்பது பொருள்தான் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டி ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டென்டுக் குச் சிரமமாகத்தான் இருந்தது. அருள்தான் முக்கியம் என்று பேசிய முதல் பேச்சாளனை எதிர்த்துப் பொருள்தான் முக்கியம் என்று வற்புறுத்திய பின் குமரேசனச் சந்தித்து அழைத்தார் ஆடிட்டர். அவன் தயங்கிளுள்.

‘'எதுக்கு മുഖഖണ് அவசரம்? பொதுவாகப் பட்டி மன்றங்களில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் நான் கிளம்பிப் பேர்கிற வழக்கமில்லையே?" - x - ، ، ہو L ரொம்ப அவசர விஷயம் அப்பா! தீர்ப்பை நாளைக்குக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம் இப்போ என்கூடிப் புறப்படு சொல்றேன்." -

தட்டிச் சொல்ல முடியாமற் போகவே முத்தமிழ் மன்றச் செயலாளரிடம் போய் விடிை பெற்றுத் தனக்குச் சேர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/159&oldid=565827" இலிருந்து மீள்விக்கப்பட்டது