பக்கம்:சுலபா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 சுலபச

இன்கம்டாக்ஸ்-வெல்த்டாக்ஸ் விவகாரங்களை அவர்தால் பார்த்துக் கொண்டார்.

வெளி ஆட்கள் யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளாதே! காலம் கெட்டுக் கிடக்கிறது! எதை எங்கே" உளறி வைப்பான்கள் என்று தெரியாது! என் மருமகள், தங்கமான பெண். எந்தத் தகவலையும் மூச்சுவிடமாட்டாள். எனக்கும் நம்பிக்கையானவள். உனக்கும் நம்பிக்கையானவள். வேலையில்லாமல் இருக்கிருள். பிரியப்பட்டதைக் கொடு! வாங்கிக் கொள்வாள்'-என்று ஆடிட்டரே கவிதாவைக் கொண்டுவந்து விட்டிருந்தார். அவளைப் பற்றி அவர் சொன்னவை நூற்றுக்கு நூறு உண்மையாயிருந்தன. கவிதா மிகமிக அடக்கமாகவும் நம்பிக்கையாகவும் நடந்து கொன் டாள். நேரம் காலம் கணக்குப் பார்க்காமல் வேலை செய்தாள். வீட்டுக்குப் போவதிலேயே குறியாயில்லை. "கொஞ்சம் வேலை. இருக்கிறது. உன் உதவி தேவைப்படுகிறது. இன்னிக்கு மட்டும் இங்கேயே சாப்பிட்டுவிட்டு என்ளுேடு தங்கிவிடேன்' என்று கலபா சொல்லி வேண்டிக் கொள்கிற தினங்களில் பிகு பண்ணிக் கொள்ளாமல் அவளுடனேயே தங்கிளுள். சம்பளத் துக்கு வேலை பார்ப்பவளைப் போலப் பழகாமல் குடும்பத்தில் ஒருத்தியைப் போலப் பழகிய காரணத்தினுல் கவிதாவைச் சுலபாவுக்கு மிக மிகப் பிடித்திருந்தது. ஆலுைம் நாசம்மா வைக் கூப்பிட்டுக் கொண்டு போகவேண்டிய இடங்களுக்குக் கவிதாவையும், கவிதாவைக் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டிய இடங்களுக்கு நாசம்மாவையும் கூப்பிட்டுக்கொண்டு போக அவள் முயலுவதே இல்லை. அதில் கவனமாயிருந்தாள்.

மிகச்சில சமயங்களில் மட்டுமே இரண்டு பேரையும் ஒரே இடித்திற்குக் கூப்பிட்டுக் கொண்டுபோக நேரிடும். ஆளுல் அப்படி இடங்களும். சந்தர்ப்பங்களும் மிகமிகக் குறைவுதான். மிக மிக அபூர்வம்தான். - w

காரியதரிசி கவிதாவையும் நாசம்மாவையும் தவிர ஒரு சமையற்காரி, ஒரு தோட்டக்காரன், ஒரு வீட்டு வேலைக்காரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/16&oldid=565684" இலிருந்து மீள்விக்கப்பட்டது