பக்கம்:சுலபா.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió0 பார்கவி

பிரமாதமாக நடக்குது. உள்ளே உட்கார இடம் கிடைக்கலே! இங்கே எங்க ஃபாதர் கிட்டே சொன்னல் அடிக்க வருவார்.'

"மார்வலஸ் ஐடியா!' என்று துள்ளிக் குதிக்காத குறை யாக உற்சாக மேலிட்டுக் கூவினான் குப்தா. "எங்கே அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்க' என்று குமரேசனை மேலும் உற்சாகப்படுத்தித் தூண்டினான் குப்தா.

"கவர்ச்சிக்காக இதை நான் சொல்றேன்னு நினைக்கா தீங்க. பரிமாறல், டேபிள் டெகரேஷன், இதமாகப் பேசுவது இதிலெல்லாம் பெண்கள் மென்மையாக நடந்துக்கறாங்க. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகத் தொழில்கள் செய்ய வேண்டும் என்ற பெண் விடுதலைக் கவிஞரின் இலட்சி யத்தையே இங்கு நான் எதிரொலிக்கிறேன். பெண்கள் அதுவும் அழகிய இளம் பெண்கள் வறுமையால் சிரமப்படும் மாநிலம் கேரளா. இந்த ஏற்பாடு பயனளிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆண்கள் வேறு கடின வேலைக் குத் தங்கள் நேரத்தைச் செலவிடலாம். '"

'தம்ம நியூ யார்கவியில் முதல்லே அறிமுகப்படுத்த வேண்டிய திட்டம் இது ஆடிட்டிர் சார், மறந்து விடாமல் இப்பவே குறிச்சு வச்சுக்குங்க.’’ என்று ஆடிட்டரை நோக்கி வியந்து கூவிஞன் குப்தா. உடனே குமரேசனிடம் அக்கறையாக, "மிஸ்டர் குமரேசன்! கேட்டரிங் வகையில் அழகிய இளம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்துத் தயாரிக்கும் அந்த இன்ஸ்டிட்யூட்டின் முகவரியையும் கொச்சினில் ஏதோ ஹோட்டல் அப்படிப் பெண்களே பரிமாறுகிற விதத்தில் வெற்றிகரமாக நடிப்பதாய்க் கூறினீர்களே அந்த ஹோட்டி லின் முகவரியையும் தயவு பண்ணி எனக்குக் குறித்துத் தர வேண்டும்,' என்றும் கேட்டிான் குப்தா.

'விலாசம் தருவது இருக்கட்டும். நியூ பார்கவி' என்று என்னமோ சொன்னிங்களே? என்னது அது? எங்கப்பா எதைத் தொடங்கிலுைம் அது நிச்சயமா நியூலா இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/162&oldid=565830" இலிருந்து மீள்விக்கப்பட்டது