பக்கம்:சுலபா.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 169

"மெல்ல அந்த ஜோசியரை இங்கே வரவழையுங்க. நான் ஏதோ பார்க்கணும்னு சொன்னதாக் கூட்டிட்டு வாங்க. கொஞ்சம் தாராளமாகக் கவனிக்கிறேன். அப்புறம் அவரிடம் சிவவடிவேலு மேட்டரை ஆரம்பிப்போம்." என்ருன் குப்தா,

ஜோசியரை அழைத்துவருகிற பொறுப்பைக் குமரேசனிடி மும் ஆடிட்டரிடமும் விட்டான் குப்தா.

ஆடிட்டரும் குமரேசனும் உடனே குருபுரம் மிராசுதார் சிவவடிவேலுவின் ஆஸ்தான ஜோசியரான கடுக்கையூர்க் கண்ணபிரானைத் தேடிக்கொண்டு அவருடைய வடக்குத் தெரு ஜோதிஷ கலாநிலையத்துக்கு விரைந்தனர்.

மாணவர்கள் போராட்டம் இப்படி அப்படி என்று ஒருவழிக்கு வராமல் இழுபடவே பார்கவி'யின் கல்லூரி மேலும் பதினைந்து நாளைக்குத் திறக்கப்படி மாட்டாது போலிருந்தது. பார்கவி அதுபற்றிக் கவலைப்படவில்லை. மிஸஸ் குப்தாவைக் காரில் மலைக்கு அழைத்துச் செல்வது. ஆஞ்சநேயர் தரிசனம். ஏலக்காய் எஸ்டேட்டைச் சுற்றிக் காண்பிப்பது. அருவிக்கு நீராடி அழைத்துச் செல்வது, குருபுரத்தைச் சுற்றியுள்ள இயற்கை அழகுமிக்க இடங்களுக்குப் பிக்னிக் கூட்டிப் போவது என்று பார்கவியின் நாட்கள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் கழிந்தன. -

ஒரு நாளி திருமதி குப்தா தான் யாரிடமோ கேள்விப் பட்டிருக்கிற ஒரு விஷயத்தைப் பார்கவியிடம் நாசூக்காகச் சிரித்தபடி வினவினுள். - .

'நீ மலை மேலிருக்கிற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி போவதுண்டா பார்கவி' .

"ஆமாம் அக்கா. ஏன் கேட்கிறீங்க?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/171&oldid=565839" இலிருந்து மீள்விக்கப்பட்டது