பக்கம்:சுலபா.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fr.Er. 177

வந்தன்னிக்குக் காலம்பரப் பலகாரச் செலவே நூற்று எழுபது ரூபா ஆயிடுச்சு! அவன் என்னமாச்சும் பண்ணி உருப்படியா ஒட்டல் லாபத்துக்கு வருமான்னு சோழியை உருட்டிப் பார்த்துச் சொல்லும் ஒய்."ன்னு என்னைக் கேட்டாரு. சோழி போட்டுப் பார்த்தேன். பிரமாதமா வந்திச்சு. செலவைப்பத்தி யோசிக்காதேயும். இந்தப் பிஸினஸ் வைத்தியர் சொல்ற யோசனைப்படி நடந்தா பர்கவியில் பொன் கொழிக்கும்'ன்னு சொல்லியனுப்பி வச்சேன்,' என்ருர் ஜோசியர். ஒளிவு மறைவின்றி நடந்ததைச் சொல்லிவிட்டார் அவர்.

"இப்போ அந்தக் குப்தாவே உம்மகிட்டி அவன் சொந்த விஷயமா ஏதோ கேட்கணும்கிருன்,' என்ருர் ஆடிட்டர்.

பேஷா... நானே வரட்டுமா? அவனை இங்கே அழைச்சுக் கிட்டு வர்றிங்களா?' என்று முக மலர்ந்தார் ஜோஸியர்; பழம் நழுவிப் பாலில் விழுந்தது.

கார் கொண்டாந்திருக்கோம். அங்கேயே போகலாம் வாங்க' என்ருன் குமரேசன். பஞ்சாங்கப் புத்தகங்களையும் சில சுவடிகளையும் சோழிகள் அடங்கிய பட்டுப் பையையும் எடுத்துக் கொண்டு ஜோஸியர் அவர்களோடு உடனே புறப் படித் தயாராளுர், -

குப்தா ஜோஸியரை எழுந்து நின்று பிரமாதமாகக் கும்பிட்டு வரவேற்ருன். தொழில் ரீதியாகப் பயன்படுவதற்காக ஜோஸியர் கொஞ்சம் இந்தி கற்று வைத்திருந்தார். குப்தா ஜோஸியரிடம் இந்தியில் பேசினன். ஜோசியரும் அவனிடம் இந்தியில் பேசினர். ஒரு மணிநேரம் தனக்கு ஏதோ ஜோஸியம் பார்ப்பது போல் பாவனை பண்ணி அவரை ஆழம் பார்த்தான் குப்தா. அப்புறம் நூற்று ஒரு ரூபாய் தட்சணை கொடுத்தான். ஜோசியர் முகம் மலர்ந்தது. வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார், அதுதான் சமயம் என்று ஆடிட்டிர் குமரேசன், குப்தா மூவரு மாக ஜோசியரை மெல்ல வழிக்குக் கொண்டு வரப் பார்த்தார் கள், ஆடிம்டர்தான் ஆரம்பித்தார். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/179&oldid=565847" இலிருந்து மீள்விக்கப்பட்டது