பக்கம்:சுலபா.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பார்கவி

'ஜோசியரே! உம்மாலே ஒரு நல்ல காரியம் ஆகணும்...'

"என்ன? உடனே சொல்லுங்க ஆடிட்டர் சார்! இப்பவே செய்துடலாம்' என்று அபார உற்சாகத்தோடு பதில் வந்தது ஜோசியரிடமிருந்து...

ஒண்னுமில்லே! நம்ம சிவவடிவேலு இருக்காரே, அவர் வசதியிலே நாலுலே ஒரு பங்கு வசதி கூட இல்லாத வடக்குத் தெரு மொஹிதீன் பாய், தெற்குத் தெரு பாக்குத்துாள் வியா பாரி பரமசிவம் இவங்கள்லாம் பேப்பர்லே பான் வாயேஜ்’னு விளம்பரம் போட்டு அமெரிக்கா, ஐரோப்பான்னு போயிட்டு வந்துட்டாங்க. இவரு இவ்வளவு பெரிய பணக்காரரா இருந்து என்ன பிரயோசனம்? ஆடிட்டர்ங்கிற முறையில 'ஒரு ஃபாரின் ட்ரிப் போயிட்டு வாங்க... உங்க மதிப்பு ஊர்லே அதிக மாகும்னு தினம் சொல்லிப் பார்க்கிறேன். அசைய மாட்டேங் கருரு. சசகறதுக்குள்ளவாவது அவரை ஒரு ஃபாரின் ட்ரிப் அனுப்பணும்னு பிரியப்படருேம், !

'பேஷா இதிலே கஷ்டிமென்ன? கரும்பு 367 கூலியா?போங்கனினு சொல்குல் போக வேண்டியதுதானே?"

'போக மாட்டேங்கருரே! குரு ஸ்தானத்திலே இருக்கிற நீங்க சொல்றபடி சொன்னக் கேட்டாலும் கேட்பார்ன்னு நினைக்கிறேன்.'"

'அவரோட ஆடிட்டரா இருக்கிற நீங்க சொல்லியே சேம் காதவர் நான் சொல்லியா கேட்கப் போருரு?" என்று மெல்லப் பின்வாங்கினர் ஜோசியர்.

'அப்படிச் சொல்லாதீங்க ஜோசியரே! நீங்க சொல்ற விதமாச் சொன்னக் கேட்பார்னு தோணுது.'

"எப்படிச் சொல்லணும்.கிறிங்க?"

'அது உங்களாலே முடியும். ஒரு நல்ல காரியத்தை

ஒப்ப வற்புறுத்திச் சொல்றதுன்னு ஜோசியத்திலே ஆயிரம் இடம் இருக்கு." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/180&oldid=565848" இலிருந்து மீள்விக்கப்பட்டது