பக்கம்:சுலபா.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பார்கவி

தான் யோசனை பண்ணுவர். பணம் செலவாகுமே இனு நினைப்பார். இந்த எழுபது வயசிலே ஃபாரின் போய் என்ன ஆகணும்னு சலிச்சிப்பார். அதுக்கு வழி எங்கிட்டே இருக்கு. நான் பார்த்துக்கிறேன்.’’ என்ருர் ஜோசியர்.

குமரேசன் ரொம்ப ஜாக்கிரதையாயிருந்தான், அப்பா வுடைய வெளிநாட்டுப் பயணம் பற்றித் தான் எதுவும் பேசி விடாமல் தவிர்த்தான். ஏனென்ருல் எங்காவது தப்பித் தவறிப் பேச்சுவாக்கில் வாய் தவறிக்கூட ஜோசியர், உங்க செகண்ம் சவி குமரேசன் கூட நீங்க வெளிநாடு போகணும்னு ஆசைப் பட்டுச் சொல்ருன்னு பிரஸ்தாபித்துவிடி நேர்ந்தால் அப்பா சந்தேகப்படுவார். போகவே மாட்டார், அதற்குப் பயந்து ஜோசியரைத் தூண்டுவதை எல்லாம் ஆடிட்டரே செய்து கொள்ளட்டும் என்று விட்டிருந்தான் குமரேசன்.

'காரியத்தை முடித்து நல்ல வார்த்தை சொல்லுங்கள்! உங்களை விசேஷமாகக் கவனிக்கிறேன், என்ஞ்ேடி கிளை யண்ட்' களிலேயே பரம்பரைப் பெரிய மனுஷன்-அதிகப் பணக்காரர் சிவவடிவேலுன்னு பேரு. அவர் இன்னும் ஒரு ஃபாரின் ட்ரிப் கூடப் போகலேன்னு நான் வெட்கப்படி வேண்டியிருக்கு, முந்தாநாள் பணம் பண்ணின புதுப் பணக் காரன் லாட்ரி டிக்கெட் வாங்கி லட்சாதிபதியானவன்லாம் மறு நாளே சிங்கப்பூர், ஜப்பான்னு பறக்கிருன். இத்தனை பெரிய மனுஷன் சாகறதுக்கு முன்னே பிளேன் ஏறி நாலு நாடு பார்த்தார்னு இல்லாமே போயிடிப் படிாது."

"கவலைப்படாதேயும்! நீர் நினைக்குறது நடக்கும்’ என்று ஆடிட்டருக்கு உறுதியளித்தார். ஜோசியர் கடுக்கை யூரார்.' - - - - -

மறுநாள் மாலையே அந்த அதிசயம் நடந்தது. பார்கவி யின் நோய்களை டயக்னைஸ் பண்ணி முடிந்ததும் தாங்களே அவரைக் கூப்பிட்டதாகவும் அதற்குமுன் அவர் அவைசிய மாகத் தன்னையோ ஆடிட்டிரையோ பார்க்க வரவேண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/182&oldid=565850" இலிருந்து மீள்விக்கப்பட்டது