பக்கம்:சுலபா.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:அதெல்லாம் வேண்டாங்க! ஆயிரமிருந்தாலும், உங்க பொண்ணு பேரிலேயே எழுதிக் குடுத்திட்டுப் போறதுதான் நல்லது. அப்படியே செய்யுங்க." . -

"எனக்கு ஒண்ணும் தெரியாது. நீங்களே அதெல்லாம் எப்படி எப்படிப் பண்ணனுமோ அப்படிப் பண்ணிடுங்க. புறப்படறது உறுதியானதும் கையெழுத்துப் போட்டுக் குடுத்துடறேன்.'

ஆடிட்டர் அனந்துக்குத் தன் செவிகளேயே நம்ப முடியவில்லை. எதற்கும் ஆயிரம் யோசனைகள் பண்ணி இரண்டாயிரம் முறைகள் தயங்கக் கூடிய சிவவடிவேலுவா இப்படிச் சொல்கிருர் என்பதை நம்பவே முடியாமல் இருந்தது. ஜோசியர், என்ன சொக்குப் பொடி போட்டு மயக்கி அவரைச் சம்மதிக்க வைத்தார் என்று மர்மமாயிருந்தது. ஒரு பைசா செலவுக்கு முன் இருநூறு முறைகள் யோசித்துத் தயங்கும் கஞ்ச மகாப் பிரபுவை எப்படி இந்த மாதிரித் துணிய வைத்தார் என்பது பெரிய ஆச்சரிய மாயிருந்தது, அவரால் நம்பவே முடியவில்லை.

பத்து வருஷங்களாகத் தான் திரும்பத் திரும்ப வற்புறுத்தி யும் வெளியே கிளம்ப மறுத்த ஒரு நாள்பட்ட பழைய கிணற்றுத் தவளையை இவர் எப்படிச் சரிப்படுத்தி வெளியே கிளப்பினர் என்று வியந்தார் ஆடிட்டர். ஜோசியரின் சாதுரியத் தைக் கொண்டாடினர்.

இதைக் குப்தாவிடம் தெரிவித்தபோது அவன் உடனே ரும்பாயைக் கூப்பிட்டு, எக்லேர் சாக்லேட் வாங்கிவரச் செய்து ஆடிட்டர், தன் மனைவி சுஷ்மா, உடனிருந்த பார்கவி, குமரேசன் எல்லோருக்குமே வழங்கின்ை. -

ஆபரேஷன் நியூ பார்கவிக்கு முக்கியமான இடைஞ்சல் கிளியராகிவிட்டது. நாம் முதலில் நினைத்ததுபோல் சிவவடி வேலு கப்பலில் போகமாட்டிார் போலிருக்கிறது. அதல்ை ஒரு வருஷமோ பத்து மாசமோ அவகாசம் கிடைக்காது. அங்கங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/185&oldid=565853" இலிருந்து மீள்விக்கப்பட்டது