பக்கம்:சுலபா.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pr. tuw. 189

சந்தேகத்தைத் தெளிவு செய்துகொள்ளும் பொருட்டு அபமிருத்யு பயம்ன என்ன ஜோசியரே?' என்பதாகக் கேட்டார் ஆடிட்டர்.

அதாவது துர்மரண பயம்! சிவவடிவேலு புரிந்து கொண்டு விட்டார். அவருக்கு ஜோஸ்யத்திலே அபார நம்பிக்கை. நில உச்சவரம்பு காரணமாகப் பூமியை வித்து ஒட்டல் கட்டலாம்னு நீங்க யோசனை சொல்லி விட்டாலும் அப்பவே எங்கிட்ட வந்துதான் சரிப்படுமா"ன்னு பிரசினம் கேட்டார். முதல்லே சிரமப் பட்டாலும் பின்னலே போகப் போக இந்த ஒட்டல் தங்கச் சுரங்கமாப் பணத்தை அள்ளித் தரும்’னு பச்சைக் கொடி நான்தான் காமிச்சேன் அப்போ.'"

"சரி, அதுக்கும் சேர்த்து வச்சுக்கும்" என்று மேலும் ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார் ஆடிட்டர்.

'நீங்க கூேடிமமா இருக்கணும்."

"இனிமேல்தான் உம்ம ஆசீர்வாதம் பலிக்கணும். இது வரைக் கஷ்டம்தான்' என்று சிரித்தார் ஆடிட்டர்.

"தயவு செய்து இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும். 'அபமிருத்யு பயம்’னு சொல்றதுக்கு எனக்கே பிடிக்கலை, என்னமோ போல இருந்து மனுஷன் கருமி கஞ்சன், இது மாதிரிச் சொல்லிப் பயமுறுத்தினலொழியக் கிளம்ப மாம் டார்னு பட்டது. சொல்லிட்டேன். எதுக்குமே பயப்படாத சிவவடிவேலு. மரணம்னு சொன்னதும் அப்படியே வெல வெலத்துப்போயி உடனே பிரயாணத்துக்குச் சம்மதிச்சுட்டார். உங்க வேண்டுகோளைத் தட்ட முடியாமல் இந்தப் பாபத்தைப் பண்ணும்படு ஆயிட்டது மிஸ்டர் அன ந்த்.'

"இதிலே ஒரு பாபமும் இல்லை. ஜோசியரே! நெருப் புன்பு சொன்னலே வாய் வெந்தா போயிடப் போறது? சிவ வடிவேலு தீர்க்காயுசா இருப்பார். அவரோடி வாரிசுகளும் தீர்க்காயுசா இருக்க நாம் பாடுபடருேம். அவ்வளவுதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/191&oldid=565859" இலிருந்து மீள்விக்கப்பட்டது