பக்கம்:சுலபா.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 tirtsca

ஜோசியருக்கு ரகசியத்தைப் பாதுகாப்பதாக மீண்டும் வாக்களித்த பின் அவரிடம் விடை பெற்ருரி அனந்ந். அதன் பின் ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் நடந்தன. பார்கவி பேருக்குப் பவர் பத்திரம் முதல் தேவையான கையெழுத்துக் கள் பெறப்பட்டன. வேஷ்டி முழுக்கைச் சட்டை தவிர வேறு உடுப்புக்களே அணிந்து பழக்கப்படாத சிவவடிவேலுவுக்கு ஒரு சூட் கோப் தைக்க அளவு எடுக்கப்பட்டது. ஆறுமாத காலம் பயணம் என்பதால் இரண்டு ஸெட் சூட்டும் கோட்டும் தைத்துக் கொள்ளச் சொல்லிக் குப்தா யோசனை சொன்னன்.

தையல் கூலி உள்பட முதல் தரமான உல்லனில் இரண்டு. செட் சூட் கோட் தைக்க மூவாயிரம் முதல் மூவாயிரத்து ஐந்நூறு வரை செலவாகும் என்றவுடன் சிவவடிவேலு மறுபடி தொட்டாற் சுருங்கி ஆகிப் பின்வாங்கினர். ..

"ஒரு நாள் கூத்துக்குத் தலை சிரைத்த கதையாவில்ல இருக்குடி! ஆறு மாச நாடகத்துக்காக மூவாயிரம் நாலாயிர ரூபாய்க்குக் குழாய் தைக்கணுமா? ஒரு புண்ணுக்கும் வேணும்; நான் ரெண்டு கம்பளிப் போர்வையை எடுத்துகிட்டுப் போயிட்டு வர்றேன்' என்ருர் அவர்.

இதைக்கேட்டு ஆடிட்டருக்கு அழுவதா சிரிப்பதா என்று ஆகிவிட்டது.

'உங்க ஸ்டேட்டஸ்க்கு அப்படி எல்லாம் பண்ணக் கூடாது. கம்பளியும் வேஷ்டியுமாப் போனிங்கன்னாத் தேயி லைத் தோட்டத்துக் கங்காணி மாதிரி இருக்கும். அதெல்லாம் கூடாது. நீட்டா கோட்டும் சூட்டும் போட்டு டிை கட்டி விட்டு நான் மேக்அப் பண்ணி அனுப்பறேன். அசல் குருபுரம் சமஸ் தானத்துக் குட்டி சமஸ்தாளுதிபதி மாதிரி நீங்க போய் இறங்கணும்! அந்தக் குளிர்லே வேஷ்டி சட்டை எல்லாம் தாங்காது. உங்க வயசையும் யோசனை பன்னிப் பாருங்க" என்று குப்தா அவரைக் கெஞ்சின்ை. ஆடிட்டிரும் வற்புறுத் திஞர். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/192&oldid=565860" இலிருந்து மீள்விக்கப்பட்டது