பக்கம்:சுலபா.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.கா. 193

எனக்கு ரெட்டிைச் சந்தோஷம் பார்கவி! நீ உங்க அண்ணன்கள் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ. அப்புறம் ரெண்டு பேருக்குமா பிளேன் டிக்கெட் எடுத்துடலாம். சண்டிகர் வரை பிளேன்லே போயிட்டோம்ளு, அங்கே வந்து கூட்டிக் கொண்டு போக அஜீத் கார் அனுப்பியிருப்பான். அவனுக்கு டெலக்ஸ் அனுப்பிடலாம். ஆப்பிள் தோட்டம் பழங்களாய்க் குலுங்கும் சீசன் இது அதெல்லாம் சுத்திப் பார்க்கலாம் இப்போ...' என்றாள் சுஷ்மா. குப்தாவிடம் சொல்லிப் பார்கவியின் சகோதரர்களிடம் அவனை அழைத்துப் போக அனுமதி பெறுமாறு சுஷ்மாவே ஏற்பாடு செய்தாள். பார்கவியும் இரண்டு அண்ணன்களிடமும் கேட்டாள். அவர்கள் சம்மதித்தார்கள்.

"இதுவரை அப்பா உன்ன்ை அடிைச்சு வைச்சுப் பாழாக் கிட்டாரு. அங்கே இங்கே போயி நாலு மனுஷாளோடப் பழகினால் தான் உலகம் புரியும்,' என்று சொல்லவே செய் தான் குமரேசன்.

'போயிட்டு வாம்மா! நீ மிஸஸ் குப்தாவோடி போறது உங்க சொந்த அக்காவோடு போகிற மாதிரி. நீ திரும்பி வர்றப்ப இந்தப் பார்கவியும் புதுசா இருக்கும். நீயும் புதுசா ஃபிரஷ்ஷா சிம்லா ஆப்பிள் மாதிரி வரணும்' என்ரும் ஆடிட்டர். ஓட்டல் பார்கவி சம்பந்தமாகச் சில செக் லீஃப்கள், ரிகார்டுகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டிார். மறுநாள் சுஷ்மாவும் பார்கவியும் சிம்லா புறப்பட்டினர்.

பிஸினஸ் டாக்டர் குப்தாவும், ஆடிட்டரும், சிவவடிவேலு மகன்களும் ஒட்டல் பார்கவியை-ஓட்டல் நியூ பார்கவியாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருந்த சமயத்தில் வெளியேறிய கரும்பாயிரம் வகையறாக்கள் பல வதந்திகளைக் கிளப்பி விட்டினர். சேற்றை வாரி இறைத்தனர்.

சிவவடிவேலுவை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு ஆடிட்டர். குப்தா இருவரும் எதோ குழப்பம் பண்ணுவதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/195&oldid=565863" இலிருந்து மீள்விக்கப்பட்டது