பக்கம்:சுலபா.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 195

பணக்காரங்க எல்லாமே பயந்தாங்கொள்ளிகள், தரமாட் டாங்க, என்று ஆடிட்டர் அதையும் மறுத்துவிட்டார்.

"வெயிட் எ மினிட் எனக்கு ஒரு ஐடியாத் தோணுது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். அநேகமாகப் பலிக்கும்... எதுக்கும் லெட் அஸ் டேக் எ சான்ஸ்,’’ என்று சிம்லாவில் தன் மைத் துனன் அஜீத்துக்கு ஒரு டெலக்ஸ் அடித்தான் குப்தா.

குப்தாவின் அதிர்ஷ்டிம் அவன் மனைவியும் அப்போது சிம்லாவில் இருந்ததால் அஜீத் அவளைக் கேட்டிானே என்னவோ அன்று இரவே மறு டெலக்ஸில் இவன் கேட்டி பதினைந்து லட்சத்தை அரேஞ்ச் பண்ண முடியும் என்று பதில் வந்துவிட்டது.

'நீங்க வெறும் பிஸினஸ் டாக்டர் மட்டுமில்லை மிஸ்டர் குப்தா. உன்மையிலேயே பரோபகாரி!' என்று ஆடிட்டிரும் சிவவடிவேலுவின் பிள்ளைகளும் அவனைப் புகழ்ந்து நன்றி சொன்னர்கள். அவன் மிகவும் அடிக்கமாக அவர்களுக்குப் பதில் கூறினன். "பொதுவாக நான் இந்த அளவு உரிமை எடுத்துக் கொண்டு என்னை ஈடுபடுத்திக் கொள்கிற வழக்கம் இல்லை. நோயைக் கண்டுபிடித்து ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்துவிட்டு விலகிக்கொள்வேன். ஆனல் இதுவரை நான் சிகிச்சை செய்த சிக் இண்டஸ்ட்ரியிலேயே இது புதுமாதிரி யானது. இதிலே யூனிட்டைவிட யூனிட்டின் உரிமையாளர் தான் நோயாளியாயிருந்தார். அதனுலே எனக்கு இது ஒரு சேலஞ்ச் ஆயிடிச்சு. ஆகவே அதிகமா இண்ட்ரெஸ்ட் எடுத்துக் கிட்டேன். நானும் என் மனைவியும் இந்தக் குடும்பத்து மேலே கொஞ்சம் அதிகப் பாசம் வச்சுட்டோம். லாபம் வர ஆரம்பிச்ச தும் என் மைத்துனைேட இந்த லோன ஒரு நியாயமான வட்டியோடித் திருப்பித் தந்துடுவிங்கன்னு நம்பறேன்.'

ஒரு லோன் டாகுமெண்ட் வேணா ரிஜிஸ்தர் பண்ணிப் Q3utrub. * * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/197&oldid=565865" இலிருந்து மீள்விக்கப்பட்டது