பக்கம்:சுலபா.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 .5تاهrتالي

"அதெல்லாம் அவருக்கு அனுப்பவேண்டாம். என்னைத் தவிர யார் எது சொன்னலும் நீங்கள் கேட்க வேண்டுமென்ப தில்லை' என்று ஆடிட்டர் மாதவி டுர்ஸ் ஆட்களுக்குக் கண்டிப்பாகப் பதில் சொல்லிவிட்டார்.

பதவி பறிக்கப்பட்ட கரும்பாயிரத்தின் சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது. கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டு சிவவடிவேலுவுக்கு அனுப்புவதாகச் சொல்லி விடும்படியும் அப்புறம் அதை ரகசியமாகத் தனக்கு அனுப்பி விடும்படியும் டிராவல் ஏஜன்ஸிக்குத் தகவல் சொல்லிச் சமாளித்தார் அனந்த். ஆடிட்டர் மூலம் நிறையப் பிரயான ஏற்பாடுகள் நடப்பதால் மாதவி டிராவல்ஸ் அவருக்குக் கட்டுப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்தது. அதனுல்தான் கரும்பாயிரம் கடிதத்தோடு போய் அணுகியபோது கூட அதை அப்படியே சிவவடிவேலுவுக்கு அனுப்பி விடாமல் ஆடிட்டரைக் கலந்து பேசிஞர்கள். *

இரண்டு மூன்று நாள் கழித்துப் பாரிஸிலிருந்து சிவ வடிவேலுவின் கையெழுத்தோடு பிக்சர் போஸ்ட் கார்டுகள் ஆடிட்டர், குப்தா. பார்கவி ஆகியவர்கள் பெயருக்கு வந்தன. ஆடிட்டருடைய கார்டிலேயே ஒரு வரி "கரும்பாயிரத்துக்கு அன்பைச் சொல்லவும் என்று இருந்தது. காசிக்குப் போயும் கர்மம் தீரவில்லை என்பதுபோல் பாரிசில் போயும் அவர்' கரும்பாயிரத்தை மறக்கவில்லை என்று தோன்றியது. சிவவடி வேலு சூட்டுக் கோட்டோடு ஆச்சியோடும் மற்றச் சுற்றுலாப் பயணிகளுடனும் எப்படியெப்படி வளைய வருவார் என்று கற்பனையில் மூழ்கினர் ஆடிட்டச். - -

ஓர் ஆடிட்டோரியம், முழுக்க முழுக்கப் பென்களே செர்வ், பண்ணும் சுபமங்களம்' என்கிற ஏ.சி. ரெஸ்டாரெண்ட். மெருகேறிய புது அறைகள், அதில் நான்கு ஏ.சி. சூப், தனி, வாசலுடன் ஒரு ஐஸ்கிரீம் பார்லர். எல்லாம் டெகரேஷன் முடிந்து தயாராகிவிட்டின.

சு-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/199&oldid=565867" இலிருந்து மீள்விக்கப்பட்டது