பக்கம்:சுலபா.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பார்கள்

குப்தா இம்முறை குமரேசனையும் தண்டபாணியையும் முன்னெச்சரிக்கை செய்தார்; 'தண்டபாணி பர்ச்சேஸ். ஸ்டோர் ரூம். கேஷ் இன்ஃப்ளோ இது மூணுக்கும் நீங்க பொறுப்பு லாட்ஜிங் முழுக்கவும் அவுட்டோர் கேட்டிரிங்கும் குமரேசன் பொறுப்பில இருக்கும்,' என்ருர்.

அந்த வாரம் குப்தாவும் குமரேசனும் காரில் கோட்டயம் புறப்பட்டார்கள். கேட்டரிங் பயிற்சி பெறும் பெண்களில் சிலரைப் பார்கவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. முதலில் நேரே கொச்சிக்குப் போய்த் தங்கி, அதே இன்ஸ்டி டியூட்டில் தயாரான பெண்களே பரிமாறும் ஒட்டலைப் பார்வை விட்டார்கள். -

குமரேசன் சொன்னது போல் அங்கே கூட்டம் பொங்கி வழிந்தது. அதே சமயம் கெளரவமாகவும் இருந்தது. அந்த ஓட்டல் உரிமையாளரைக் குப்தாவும் குமரேசனும் சந்தித்து, *இப்படி முழு அளவில் பெண்களே பரிமாறுபவர்களாக - இருப்பதில் பிரசினை உண்டா? அவரது அனுபவம் எப்படி?" என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்தார்கள். அவரது பதில் ஆச்சரியப்படி வைத்தது. - -

"எங்களைப் பொறுத்தவரை ஒரு பிரசினையும் இல்லை. சொல்லப் போளு எங்கள் கேரள கலாசாரப்படி முண்டும் சோளியும் அணிந்து, தாவணி கூட இல்லாமல் தான் இவங்க பரிமாறுகிருங்க. எங்க கஸ்டமர்ஸ் டிஸன்டா நடந்துக்கிருங்க. கேரளத்துக்கு வெளியிலே இருந்து வர்ற அந்நியப் பிரதேசத் துக் கஸ்டமர்ஸ்தான் கொஞ்சம் இண்டிஸண்டா வெறிச்சுப் பார்க்கிருங்க! எங்க ஒட்டல் மேனேஜ்மெண்ட்டைப் பொறுத்த வரை இவங்களுக்குத் தனி விடு எடுத்துக் கொடுத்துத் தங்க வச்சிருக்கோம். எங்க சொந்தத் தங்கைகள் மாதிரி கவனிச் சிக்கிருேம்.’’ -

இதை மத்தவங்க தப்பா ఏsడిrఉఅఉsarr, பேசருங்களா?' - - - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/200&oldid=565868" இலிருந்து மீள்விக்கப்பட்டது