பக்கம்:சுலபா.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

or-no s 199

" அப்படி நினைக்கிறதுக்கும் பேசறதுக்கும் இதிலே என்ன தப்பு இருக்கு? விமானங்களிலே ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் அழகாக டிரஸ் பண்ணிக்கிட்டுச் சிரிச்சுப் பேசிப் பிரயாணிங் களுக்குச் சிற்றுண்டி,உணவு பரிமாறலியா? அது மாதிரிதானே? ஐரோப்பாவிலே எத்தனை செஸ்டாரெண்ட்ஸ்லே பெண்களே பரிமாறுகிறார்கள்? இதிலே என்ன தப்பு? தப்புன்னு நினைக்கிற, மனப்பான்மைதான் தப்பு. i

குப்தாவுக்கும் குமரேசனுக்கும் அவருடைய பதில் சுபாவமாகவும் திருப்தியாகவும் இருந்தது. பல விஷயங்களில் எந்தக் கோளாறும் இல்லை. அதைப் பார்க்கிறவர்களின் பார்வையில்தான் கோளாறு, உருவாகிறது என்று தோன்றி யது. இத்தகைய பெண்களில் சிலர் சில ஆண்டுகள் இப்படி வேலை பார்த்தபின் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தப் போய்விடுவதாகவும் அந்த ரெஸ்டாரெண்டின் அதிபரே கூறினர். சிலர் விஷயத்தில் கஸ்டிமர்களில் இருந்தே கெளரவமான கணவர்கள் கிடைத்துக் காதல் கல்யாணம் ஆகி. யிருப்பதாகவும் அவர் கூறினார். கல்யாணமான பின்னும் வேலையில் தொடர்கிற சில பெண்களையும் அளரே கூப்பிட்டு அறிமுகப்படுத்தினர். குருபுரம் போன்ற ஓர் ஊரில் இதை ஒரு சீப் டெக்னிக் என்றும் வியாபார உத்தி என்றும் யாரா வது புரளி கிளப்பிவிட்டு விடக்கூடாதே என்று அவர்கள் யோசிக்க வேண்டியிருந்தது. . . .

துணிந்து செய்யுங்கள் உங்கள் ஊரில் இது இன்னும் வெற்றியளிக்கும். பேசுகிறவர்கள் பேசிப் பேசி ஓய்ந்து போவார்கள். ஆனால் நீங்கள் நாணயமாக நடந்து, கொண்டால் எதுவும் கேடுவராது." என்றார் கொச்சி, யில் அந்த ரெஸ்டாரெண்ட்டை நடத்தியவர்.

பெண்களே செர்வ் செய்யும் சுபமங்களம் ஏ.சி. ரெஸ்டாரெண்டுக்கு ஏற்பாடு செய்யும் உறுதியுடன் அந்தக் கொச்சி ஒட்டல் அதிபரிடம் ஒரு சிபாரிசுக் கடிதமும் வாங்கிக் கொண்டு கோட்டயம்.புறப்பட்டார்கள் அவர்கள், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/201&oldid=565869" இலிருந்து மீள்விக்கப்பட்டது