பக்கம்:சுலபா.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 arfas^

நியூ பார்கவியில் முதலில் நாலே நாலு சூட்" மட்டுமே ஏ. சி செய்திருந்தார்கள். இந்தச் சினிமா யோகம் அடித்தபின் பல சூட்களை ஏ. சி. செய்யும் அவசரமும் அவசியமும் நேர்ந்தன. லாட்ஜிங் சைடில் இப்படி அதிர்ஷ்டம் என்ருல் பெண்களே பரிமாறும் கவர்ச்சியால் ரெஸ்டாரெண்டில் உட்கார இடம் கிடைக்காத அளவு கூட்டம் நெரிசல் பட்டது. லாப தசை ஆரம்பமாகி விட்டது. -

அவசர அவசரமாக ஐந்நூறு பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து சாப்பிட முடிந்த இன்னொரு டைனிங் ஹாலேக் கட்டி அதிலும் பெண்களே பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை.

ஒட்டல் திறந்து இரண்டே மாதங்களில் நியூ பார்கவி பிரபலமாகி விட்டாள். ஒரே சயயத்தில் பார்கவியில் தங்கள் ஸ்டார்களுக்கும் யூனிட்டுக்கும் ரிஸர்வேஷன் கேட்டுப் பல புரொட்யூலர்கள் போட்டி போட்டார்கள். பார்கவியில் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி விட்டது. ஒரு வியாபார விஷயமாக வருகிற கார்டமம் எக்ஸ்போர்ட் வியாபாரிக்கோ, குருபுரம் ஆஞ்சநேயருக்குப் பிரார்த்தனை நிமித்தம் வடை மாலை சாற்ற வருகிற ஒரு வெளியூர்ப் பிரமுகருக்கோ அறை வசதி கிடைக்காமல் பார்கவியின் அறைகளைச் சினிமா யூனிட்டுகள் மாதக் கணக்கில் புக் செய்யத் தொடங்கினர்கள். லாட்ஜிங்கில் இந்த இடம் போதாது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஒட்டல் நியூ பார்கவியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நிலைமை அவசரமாக ஏற்பட்டது.

| 4 ஆல்டர்டாமிலிருந்து சிவவடிவேலு எழுதின ஒரு

எர்மெயில் கடிதத்தில் குருபுரம் நிலவரங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல், நான் வந்து சேருகிறவரை மேற்கொண்டு நஷ்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/210&oldid=565878" இலிருந்து மீள்விக்கப்பட்டது