பக்கம்:சுலபா.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பார்கவி

அது சரிப்பா. நீ நாலு மாசத்திலேன்னு சொன்னதும் தான் நினைவு வருது, அப்பா வர்ற நாளு நெருங்குது. அந்த மாதவி டுர்ஸ் மெட்ராஸ் ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி உங்கப்பா வர்ற தேதியை விசாரிக்கணும்,' என்று ஆடிட்டிர் ஞாபகப்படுத்தினர்.

"இந்த ஃபாரின் டுர் எங்கப்பாவை ஏதாச்சும் மாத்தி யிருக்கும்னு நெனைக்கிறீங்களா? ஒரு அங்குலம்கூட மனசு அகலமடைஞ்சிருக்காது. நான் வேணும்ளுச் சேலஞ்ச் பன்றேன். காசிக்குப் போயும் கர்மம் விடலேங்கிற மாதிரி எப்ப அத்தினி தூரம் போயும் கரும்பாயிரத்துக்கு அன்பைச் சொல்லவும்’னு மனுசன் எழுதினரோ, அப்பவே புரிஞ்சு போச்சு சார்!"

'அடி உனக்குக் கோபம்லாம் அவர் உன்னை விசாரிச்சு எழுதலேங்கிறதுதானே? இல்லியா?" என்று ஆடிட்டர் கிண்டலில் இறங்கியதும், "என்னையோ குமரேசனையோ எங்கப்பா மனுஷங்களாகவே மதிக்க மாட்டிார்ங்கிறதுதான் ஊரறிஞ்ச விஷயமாச்சே?’ என்று தண்டபாணி தம்பிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தான்,

"சரி! இந்த நல்ல நேரத்துலே எதுக்கு வின் கசப்பான பேச்சு? சப்ஜெக்ட்டை மாத்து. அப்பாவை அஜெண்டாவில இருந்து தூக்கு அந்த இடத்திலே குப்தாவைப் போடு, குஷியா அவரைப் பத்திப் பேசலாம். பார்கவி எக்ஸ்பான்ஷன் பற்றி முன்னலே பாதி பேசினதோட நிக்குது. குப்தா எங்க இருக்கார்? எப்ப வருவார்? அவர் வந்ததும் எக்ஸ்பான்ஷன் விஷயமா மறுபடி யோசிக்கனும்,' என்ருன் குமரேசன்.

பகுப்த், இன்னிக்கு அகமதாபாத்திலே இருக்கனும்! அங்கே ஒரு டெக்ஸ்டைல் இண்டிஸ்ட்ரீ லாக் அவுட்". அது சம்பந்தமா அந்த இண்டஸ்ட்ரியோட உரிமையாளர்களுக்கு யோசனைகூறப் போயிருக்கான். அது முடிஞ்சதும் அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/214&oldid=565882" இலிருந்து மீள்விக்கப்பட்டது