பக்கம்:சுலபா.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 Lig fæsß

பொண்ணு அங்க நின்னிச்சு, இங்கே நின்னிச்சு அவளுேடி தங்கிச்சு, இவைேட தங்கிச்சுன்னு எவனும் நாக்குமேலே பல்லுப் போட்டுப் பேசிற முடியாது. இதிலே கொறை சொல்ல என்னய்யா இருக்கு? சும்மாச் சொல்லக் கூடிாது. அந்தக் குமரேசன் பயலும் தண்டபாணியும் அந்தக் கேரளப் பொண்ணு களை அக்கா தங்கச்சி மாதிரித்தான் நடத்தருங்க."

"நீரே சர்டிபிகேட் எழுதிக் குடுப்பீரு போலிருக்கே?'

"என் சர்டிபிகேட் அவங்களுக்கு எதுக்குப் பண்டிாரம்? நீ சொல்ற மாதிரிச் சிவவடிவேலு மொதலாளி திரும்பி வந்து இவங்களை என்னமோ பண்ணிடுவாருன்னு நான் நெனைக் கல்லே. வேணும்னு தனக்கு இல்லாத பிஸினஸ் சாமர்த்தியம் தன் பையங்களுக்கும் பொண்ணுக்கும் இருக்கிறதைப் பார்த்து வெட்கப்பட்டுக்குவாரு."

"உனக்குத் தெரியாது தவசி! பெரியவருக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா. இந்தப் பார்கவி அந்தக் குப்தாவோடி மச்சாகி ஒருத்தன் அஜீத்னு வந்திருந்தானே அவனேடி சுத்துதாம். இந்தக் குமரேசன் பய கேரளாவிலே இருந்து வந்திருக்கிற குட்டிங்களிலே படு ஷோக்கா இருக்கிற ஒண் ளுேட ரொம்ப இழையருளும்."

"போயிட்டுப் போருங்க! அதைப் பார்த்து உனக்கு ஏம்பா பத்திக்கிட்டு எரியுது? நீ நினைக்கிற மாதிரி சிவவடி வேலு அதையெல்லாம் கண்டுக்க மாட்டாரு. பணம் இருந்தா மத்ததெல்லாம் அவருக்கு மறந்துடும்." -

மலை மேல் தாங்கள் புதிதாக வைத்திருக்கும் கான்டினில் ஈயாடுகிற சமயத்தில் இப்படி அரட்டையில் நேரத்தைக் கழித்தனர் கரும்பாயிரமும் தவசிப்பிள்ளையும், கரும்பாயிரத் துக்கு இன்னும் கொஞ்சம் நைப்பாசை உள்ளுர இருந்தது. சிவவடிவேலு:திரும்பி வந்தவுடன் தன்னைக் கூப்பிட்டனுப்பிப் பார்கவியிலேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து விடுவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/218&oldid=565886" இலிருந்து மீள்விக்கப்பட்டது