பக்கம்:சுலபா.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பர். #37

இப்போ ஹாஸ்டல் விட்டுப் பரீட்சை முடிஞ்சு லீவுக்கு வந்திருப்பாள். வேலையாட்களிடம் சொல்லியாவது கதவைப் பத்திரமாகத் தாழ் போடிச் சொல்லும்படி ஆச்சியும் சொல்லு கிருள். ஆச்சியும் நானும் செளக்கியம் என்று அனைவரிடமும் கூறவும். கரும்பாயிரத்துக்கு அன்பு ரீமான் குப்தாவை நான் விசாரித்ததாகத் தெரிவிக்கவும்." .

-என்று ஆடிட்டருக்கு எழுதியிருந்தார் சிவவடிவேலு. ஆடிட்டர் இந்தக் கடிதம் வந்ததும் குமரேசனிடம் கொடுத்து . * உன் மேலேதாம்பா அவருக்குக் கொள்ளைப் பிரியம். உனக்கு ஞாபகமறதி அதிகம்கறது அவருக்கு டோக்கியோவிலே வச்சுத்தான் நினைவு வந்திருக்கு. சதாகாலமும் உன் நினைவு தான் போ' என்ருர் ஆடிட்டர். கிண்டிலாகத்தான் சொன்னர்.

"என்னை அத்தனை சுலபத்திலே மறந்துடி முடியுமா? ஆடிட்டர் சார்! இந்த மிராசுதார் குடும்பத்திலே இவர் மாதிரி ஒரு தந்தைக்குத் தப்பித் தவறிப் பிறந்துவிட்ட அறிவு ஜீவி நான் ஒருவன் தானே சார்? இந்த வட்டாரத்திலேயே தமிழ் இலக்கியக கூட்டம் நடத்தற எவனே வேணுக் கேளுங்க! 'குமரேசன்'ளுத் தமிழ்த் தெரிஞ்ச எவனும் உடனே துவிளிக் குதிச்சாகணும். முந்த நாள்கூட ஒருத்தன் மகிழ்ச்சி தருவது காதலா-பெற்ருேர் ஏற்பாடு செய்யும் திருமணமா?’ங்கிற பட்டிமன்றத்திலே பேச அழைக்க வந்தான். நேரமில்லே. பிஸினஸ்ல இறங்கியாச்சுப்பான்னு திருப்பி அனுப்பிச்சேன்,' என்று சவடால் பேசிவிட்டுக் கடிதத்தைப் படித்த குமரேசன், "ஒரு மண்னுமில்லை வழக்கமான பொலம்பல்தான். அன்பைக் கரும்பாயிரத்துக்குத்தான் அனுப்பியிருக்காரு," என்று அலுத்துக் கொண்டே கடிதத்தை அவரிடம் திருப்பி நீட்டின்ை. - t

"ஆமாம், அதென்னமோ அறிவு ஜீவின்னியே? என்னப்பா அர்த்தம்' - - м .

இன்டிெலக்சுவல்ங்கிறதுக்குத் தமிழ் சார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/229&oldid=565897" இலிருந்து மீள்விக்கப்பட்டது