பக்கம்:சுலபா.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பார்கவி

"நீ இன்டெலக்சுவலா...?’’

சந்தேகமென்ன? எங்கப்பா மட்டும்தான் அதை ஒத்துக்க மாட்டாரு." -

"எனக்கும்கூட டிவுட்ஸ் இருக்கு...'

'சந்தேகமும், அவநம்பிக்கையும் மனிதனின் முதல் எதிரிகன். வளர்ச்சியின் வழித்தடைகள், அதை நீங்க புரிச்சுக்கணும் சார்!"

பொதுவிலே சொல்றியா? அல்லது உன்னை அறிவு ஜீவியா இல்லையான்னு நான் சந்தேகப்படிறதாலே மட்டும் சொல்றியா?" -

"எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். எங்கப்பா கூடப் பழகின ஆடிட்டர்தான்னு நீங்க அடிக்கடி நிரூபிச் சிடிறீங்க...'

"சரிப்பா. எல்னை விட்டுடு. ஒப்புக் கொண்டு விடுகிறேன். நீ அறிவு ஜீவிதான்."

இந்த ஆபரேஷன் நியூ பார்கவியே ஐயாவோடி பிரைன் சைல்டுதான். பெண்களையே சர்வீஸுக்கு அமர்த்தற சுப மங்களம் ஐடியாவும் நான் கொடுத்ததுதான் சார்! இன்னிக்கு இங்கே இத்தினி சினிமாக்காரன் வந்து தங்கற மாதிரி அவங் களோட பேசி லொகேஷன் சொல்லி மலைமேலே எங்கே அருவி இருக்கு எங்கே சூயிஸைட் சீன் எடுக்கிற மாதிரிப் பள்ளத்தாக்கு இருக்கு எங்கே டூயட் பாடற மாதிரி லேக் தோட்டம் மரக்கூட்டம்ல்லாம் இருக்குன்னு விவரமாத் தகவல் குடுத்து அவங்களை வசப்படுத்தி இருக்கேளுக்கும். இன்னிக்கு மெட்ராஸ்ல எந்தப் புரொட்யூஸ்ரை வேணுக் கேளுங்க... கண்ணை மூடிக்கிட்டுச் சொல்வான்: "நேரே குருபுரம் போங்க நியூ பார்கவியிலே குமரேசன்னு இருக்காரு, அங்கே அவர் தான் ஆல் இன் ஆல். லொக்கேஷன் சொல்றதிலே அவர் நடிமாடும் பல்கலைக் கழகம்பாங்க, உற்சாகம் மேலிட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/230&oldid=565898" இலிருந்து மீள்விக்கப்பட்டது