பக்கம்:சுலபா.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பார்கவி

வேலுவின் குடும்ப நலனுக்காகவே பயன்படுத்தியிருந்தார். குப்தாவும் யோசனைகள் கூறி இருந்தான்.

அன்று மாலை போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங் நினைத்தபடி நடந்தது. அஜீத் டைரக்டர் ஆன்ை. நியூ பார்கவி அனெக்ஸ் ப்ளுயிரிண்ட் அப்ரூவ் ஆயிற்று.

இவற்றைக் கொண்டாடுவதற்காக ஒரு விருந்தும் இருந்தது. அந்த விருந்தில் பார்கவி டைரக்டர் குழுவைத் தவிர. குடும்பத்துக்கு வேண்டிய பிரமுகர்களும், சில தொழிலதி பர்களும், வேண்டிய வியாபாரிகளும்கூடி அழைக்கப்பட்டிருந் தனர். பெண்கள்தான் பரிமாறிஞர்கள்.

‘'தேவசேன! எல்லாரையுமே கவனிச்சுப் பரிமாறு: கமரேசனை மட்டுமே கவனிக்காதே, என்று அவளை வம்புக்கு இழுத்தார் ஆடிட்டர்."

எல்லார் முன்னிலையிலுமே அவர் அப்படிப் போட்டு உடைத்ததுமே அவள் திணறிப் போளுள். கையும் காலும் பதறின அவளுக்க. அந்த அழகிய இளம் பெண்ணின் மிரட்சியிலும், பதற்றத்திலும் கூட ஒர் அழகு தெரிந்தது.

"என்னப்பாது! உங்கப்பா வந்து பார்த்தால் என்னைத் திட்டப் போருரு. உன்ளுேடி சாய்ஸ் கேரளா. பார்கவியோட சாய்ஸ் ஹிமாசலப் பிரதேசம். மொழி, இனம், பிரதேசம் எல்லாத்தையும் மறந்து எங்கெங்கியோ மனசைப் போக விட்டுட்டீங்க... பெரியவங்க மனம் போன போக்கில் போக வேண்டாம்’னு உங்களுக்குத்தான் சொன்னங்க..." என்று

அவன் காதருகே ஆடிட்டிர் முணுமுணுத்தார்.

குமரேசன் சிரித்தான். அதுலே பாருங்க ஆடிட்டர் சார்! மகாகவி பாரதியாருக்குத் துரோகம் பண்ணப்படிாதுன்னு பார்க்கிருேம். அவர் சொன்னதெல்லாம் பலிச்சுப் போச்சு! ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’னு சுதந்திரம் வர்றதுக்கு முன்னடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/236&oldid=565904" இலிருந்து மீள்விக்கப்பட்டது