பக்கம்:சுலபா.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#r. Eir. 285

பாடினரு. சுதந்திரம் வந்திடிச்சு. இரும்பைக் காய்ச்சி உருக் கிடுவீரே, இயந்திரத் தொழில்கள் செய்திடுவிரே"ன்னு பாடினரு. இயந்திரத் தொழில்கள் பெருகிடிச்சு. ஒரே ஒரு விஷயத்திலே மட்டும் அவர் சொன்னது இன்னும் அதிகமாப் பலிக்காமே இருக்கு!'

‘'எதுலே குமரேசன்?"

'ஒருமைப்பாட்டிலேதான். "சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னட்டு இளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்ருை. இதிலே பாதியையா வது நான் பூர்த்தி செய்து அவருக்கு விசுவாசமா நடந்துக் கணும்னு பார்க்கிறேன் ஆடிட்டர் சார்.'

'எந்தப் பாதியை அப்பா?”

'அதாவது சேர நன்னும்டு இளம் பெண்களுடன் விளை யாடுவோம்கிற நடுப்பாதியை." -

"அப்ப சிந்து நதியின் மிசைங்கிற முதல் பாதிப் பகுதி?’’

"அதைப் பார்கவி பார்த்துக்கிறா. கங்கை நதிப் புறத்துக் கோதுமை பண்டம், காவிரி வெற்றிலக்கு மாறு கொள்வோம் கிற பின் பாதியையும் சேர்த்து அவளும் அஜித்தும் பூர்த்தி செய்யருங்க..."

'சபாஷ்டா பாண்டியா! போட்டியே ஒரு போடு! அப்ப பாரதியாருக்குக் கெட்ட பெயர் வரப்படாதுங்கிற நல்லெண் ணத்திலே தான் நீங்க அண்ணனும் தங்கையுமா இப்படி இனம், மொழி, பிரதேசம் கடிந்து காதலிக்கிறீங்களாக்கும்."

"அதுமட்டுமில்லை! இன, மத, மொழி, பிரதேச வெறி களைத் தணிக்கவும் ஒருமைப்பாடு பரவவும் இந்தக் குருபுரம் ஃபேமிலியிலிருந்து ஒரு ஸ்மால் நேஷனல் காண்ட்ரிபியூஷன். * ஹம்பிள் பிகினிங்.." . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/237&oldid=565905" இலிருந்து மீள்விக்கப்பட்டது