பக்கம்:சுலபா.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 tirtsch

'பரவாயில்லேப்பா! பேச்சாளனாயிருக்கிறதாலே உனக்கு ஒரு வசதி! சின்ன விஷயங்களைக் கூட நேஷனல் லெவலுக்கு என்லார்ஜ் பன்னிப் பேசக் கத்துக்கிட்டே?”

'கம்மா பேசறது மட்டுமில்லை சார் ஆதாரத்தோடி நிரூபிப்பேன் சார், இப்போ பார்கவி தீவிரமா இந்தி படிக் குது. அஜீத் முப்பது நாளில் தமிழ் கற்கும் முறைகள்'ங்கிற இங்கிலீஷ் புத்தகத்தை நேத்துத்தான் ஏர்போர்ட்லே வாங்கி யிருக்கான். ஒரு தமிழ் வாத்தியார்-வித் இந்தி ஒர்க்கிங் நாலட்ஜ் அல்லது இங்கிலீஷ் ஒர்க்கிங் நாலஜ்ட் தேடிகிட்டே இருக்காள். சல்லடை போட்டுக் சலிச்சாலும் அந்த சேர் காம்பினேஷன்ல ஆள் அகப்படவே மாட்டேன்றன். இங்கே தமிழ் மட்டுமே தெரிஞ்ச தமிழறிஞர்கள்தான் ஆப்பட றாங்க. அதனலே தமிழ் தெரியாதவனுக்கு தமிழ் கற்பிக்கிற மாதிரி ஆள் அகப்படறதே கஷ்டமாயிருக்கு. தமிழை வேற ஏரியாவிலே பரப்பணும்னலும் அதுக்குத் தமிழோட இன்னொரு பாஷையாவது கூடத் தெரிய வேன்டியிருக்கு இங்கே அப்படி இல்லே சார், நான் மலையாளம் படிக்கிறேன். தேவசேன தமிழ் கத்துக்குது. இப்படி எங்களாலே முடிஞ்ச மட்டும் பாரதியாருக்கு நல்ல பேர் தேடிக் குடுத்திட்டிருக்கோம்! அவர் மானத்தைக் காப்பாத்திக் கொண்டு வருகிருேம்.'

"எமகாதகன்டா நீ ஏதோ பாரதியார் உன்னத் தேடி வந்து, "அப்பனே! தேவசேனயைக் காதலிச்சு என் வாக்கை மெய்ப்பிப்பாயாக’ன்னு வரம் கேட்ட மாதிரியில்லே அடிச்சு விடறே' : 8 -

"அவருவந்து கேட்பாரா என்ன? இதெல்லாம் நாமாப் புரிஞ்சுக்கிட்டுப்பண்ணவேண்டியது தான் ஆடிட்டர் சார்!’

இப்படி அவன் அதை வெகு சகஜமாகவும் சவடாலாகவும் சொல்லிய விதத்தை ஆடிட்டர் சுவாரஸ்யமாக ரசித்துக் கேட்டார், பயல் கெட்டிக்காரன்தான் என்று உள்ளூர வியந் தார். மனசுக்குள் பாராட்டினர் கொண்டாடினர். * . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/238&oldid=565906" இலிருந்து மீள்விக்கப்பட்டது