பக்கம்:சுலபா.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பார்கவி

அவர் வேற வாக்கியத்தைப் பேசிட்டார்ளு நான் உங்களுக்கு அதே நேரத்திற்குள் ஐயாயிரம் ரூபாய் குடுத்துடுவேன்.'

"எல்லாம் சரி! ரொம்பக் காம்ப்ளிகேடிப் ஆகச் சொல்றி யேப்பா? அதென்ன கணக்கு? ஒரு வாக்கியம்கிற நிபந்தனை எதுக்கு? மாறியிருக்கிருரா இல்லையான்னு உங்கப்பாளைக் கவனிச்சு முடிவு பண்ணினப் போருதா?’’

"அது ரொம்பச் சிக்கல்! அந்த ஒரு வாக்கியத்தை நீங்க சம்மதிச்சா இப்பவே எழுதிக் காண்பிக்க நான் தயார்..."

"எங்கே எழுதிக் காட்டு! பார்க்கலாம்.'

குமரேசன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுத் தாளை எடுத்து அவசரமாக இரண்டே இரண்டு சொற்களை எழுதி ஒரு கேள்விக் குறியையும் முடிவில் போட்டு அவரிடம் காட்டினன். அதைப் படித்துவிட்டு, "இதுக்கு என்ன அர்த் தம்? இந்த சென்டு வார்த்தையைத்தான் அவர் முதல்லே கேட்பார்னு சொல்றியா?"

"ஆமாம்! இப்படிக் கேட்டார்ன நீங்க எனக்குப் பந்தயத் தொகை தரணும். இப்படிக் கேட்காவிட்டிாலும்-வேறு எப்படிக் கேட்டாலும் நாள் உங்களுக்குப் பந்தயத் தொகை யைத் தரணும். தந்து விடுவேன்.'

"அப்படியாளு எனக்குத்தான் சான்ஸ் அதிகம். சம்மதிக் கிறேன், என்றார் ஆடிக்டர். -

திட்டமிட்டபடியே அந்தத் துண்டுத் தாளை ஒரு கவரில் போட்டு நாலு முனையிலும் நடுவிலும் அரக்கு சீல் வைத்து விவரம் சொல்லி இருவருமாகக் குப்தாவிடிம் போய்க் கொடுத் தார்கள். . . . . .

குப்தா கேட்டிான். இதிலே நான் உங்க செண்டு பேருக்கும் ரெஃபரியா? விரக்தியிலே இரண்டு பேருமாச் சேர்ந்து ரெஃபரியை உதைக்க மாட்டிங்கனே?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/244&oldid=565912" இலிருந்து மீள்விக்கப்பட்டது